முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விமான பயணத்தில் தெரிந்த அபூர்வ ஒளித் தோற்றம்.. துள்ளிக்குதித்த பெண்கள்.. இணையத்தில் பரவும் காட்சிகள்

விமான பயணத்தில் தெரிந்த அபூர்வ ஒளித் தோற்றம்.. துள்ளிக்குதித்த பெண்கள்.. இணையத்தில் பரவும் காட்சிகள்

வட துருவ ஒளிகள்

வட துருவ ஒளிகள்

இரு இளம்பெண்கள் தங்கள் பயணத்தின் போது இந்த வடதுருவ ஒளிகளை பார்த்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து டிரென்டாகி வருகிறது.

  • Last Updated :
  • Ladakh, India

நமது பூமியில் நிகழும் இயற்கை தோற்றங்கள் நம்மை சில முறை பரவசத்தில் ஆழ்த்தும், சில முறை பிரம்மிக்க வைக்கவும் செய்யும். அப்படிபட்ட அதிசய இயற்கை தோற்றங்களில் ஒன்று தான் துருவ ஒளிகள். வானில் வண்ணங்களின் நடனமாடும் இந்த அதிசய நிகழ்வு பார்ப்போரின் கண்களுக்கு ஒளி விருந்தை தரும் எனலாம்.

துருவ ஒளி அல்லது ஆரோரா (Aurora or northern/southern polar lights) என்பது வட, தென் துருவ பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றம். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம், உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் மாலை நேரங்களில் எளிதாக காணமுடியும். இத்தகைய அதிசய வட துருவ ஒளிகள் கடந்த வாரம் இந்தியாவில் தென்பட்டதாக இணையத்தில் செய்திகள் வேகமாக பரவின.

அரோரா போரியாலிஸ் என்ற வட துருவ ஒளிகள் ஒரு அரிய நிகழ்வு. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் லடாக் பகுதியில் தென்பட்டதாக பிரபல தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவுகளை வெளியிட்டனர். வானில் பச்சை நிற நதி ஓடுவது போல அவை இரு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்திய பெருங்கடல் நீருக்கடியில் அழகான நீர்வீழ்ச்சி... எங்கு உள்ளது தெரியுமா?

அதேவேளை பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சி அமைப்பான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனம் வட துருவ ஒளிகள் அல்ல, இவை அதே தன்மை கொண்ட SAR Stable Auroral Red என்ற நிறத்தோற்றம் என்று விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வடதுருவத்தை ஒட்டிய ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் விமான பயணம் மேற்கொண்ட இரு இளம்பெண்கள் தங்கள் பயணத்தின் போது இந்த வடதுருவ ஒளிகளை பார்த்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து டிரென்டாகி வருகிறது.
 
View this post on Instagram

 

A post shared by Rachel Levin (@rclbeauty101)ரேச்சல் லெவின் என்ற பெண் தனது தோழியுடன் விமானத்தில் சென்றுள்ளார். இவர் தனது பயணத்தின் போது பயணிகள் நார்தர்ன் லைட்ஸைப் பார்க்க வாய்ப்பு இருப்பதாக விமானி திடீரென அறிவித்துள்ளார். இதை கேட்டதும் உற்சாகமடைந்த இருவரும் இருவரும் தங்கள் ஜன்னலில் இருந்து வட துருவ ஒளிகளை பார்த்து மட்டும் அல்லது அதை வீடியோவும் எடுத்தனர். தனது இன்ஸ்டாவில் ரேச்சல் லெவின் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ஆர்வமாக கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

First published:

Tags: Ladakh, Viral News