முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விராட் கோலியையும் விட்டு வைக்காத ‘நாட்டு நாட்டு’ பாடல் வைப்... மைதானத்தில் நடனமாடிய கோலி...!

விராட் கோலியையும் விட்டு வைக்காத ‘நாட்டு நாட்டு’ பாடல் வைப்... மைதானத்தில் நடனமாடிய கோலி...!

விராட் கோலி நடனம்

விராட் கோலி நடனம்

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் தொடரையும் வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் மும்பையில் விளையாடிய முதல் போட்டியில், ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விராட் கோலி ஆடியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அதிகார ட்விட்டர் பக்கம், இன்று இவர் என்ன ஆட போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

First published:

Tags: Virat Kohli