முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மாமனாரை திருமணம் செய்தாரா மருமகள்..? தீயாய் பரவிய வீடியோவின் உண்மை இதுதான்!

மாமனாரை திருமணம் செய்தாரா மருமகள்..? தீயாய் பரவிய வீடியோவின் உண்மை இதுதான்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பெண் ஒருவர் தனது மாமனாரை திருமணம் செய்து கொள்ளும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலானது.

  • Last Updated :
  • Kerala, India

நம் நாட்டில் திருமணத்தின் போது ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகள் காரணமாக, நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு பதிலாக அவரது சகோதரிகளை மணமகன் திருமணம் செய்துகொள்வதும், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு பதிலாக வேறு உறவுக்கார இளைஞரை மணப்பெண் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். சில இடங்களில் பல தார திருமணங்களும் வினோதமாக நடைபெறுகிறது.

ஆனால், சமீபத்தில் ஒரு பரபரப்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் ஒரு பெண் தனது மாமனாரை திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறது. கணவரை இழந்த காரணத்தால் கணவரின் தந்தையையே அப்பெண் திருமணம் செய்வதாக வீடியோவில் உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து நாம் இப்போது அறியலாம்.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சிவப்பு நிற உடையுடன் மணப்பெண் கோலத்தில் கோயிலில் இருந்து மலையும் கழுத்துமாக வெளியே வருகிறார். அவருடன் வயதான தோற்றம் கொண்ட நபர் ஒருவரும் மாலையுடன் ஜோடியாக வெளியே வருகிறார்.

அந்த வீடியோவில் பெண்ணின் கணவர் மரணமடைந்ததால், கணவரின் தந்தையை பெண் திருமணம் செய்ததாக் தெரிவிக்கப்படுகிறது. விருப்பத்துடன் தான் திருமணம் நடைபெறுகிறதா என்று பெண்ணிடம் கேள்வி எழுப்பப்படும் நிலையில், ஆம் விரும்பித்தான் திருமணம் செய்கிறேன் என்கிறார் பெண்.

ஏன் முதியவரை மணக்கிறீர்கள் என்று கேள்விக்கு, இவரை விட வேறு யாரும் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதில்லை என்கிறார் அந்த பெண். இந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை போல தோன்றும் நிலையில், இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால், பின்னர் தான் இது சித்தரிக்கப்பட்ட வீடியோ உண்மை சம்பவம் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை விதிக்க முடியாது.. கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டம்..!

top videos

    ஆனால், இது போன்ற சம்பவங்கள் ஒன்றும் நடக்காமல் இல்லை. நிஜமாகவே உத்தரப் பிரதேச மாநிலத்தில் 70 வயது முதியவரான கைலாஷ் யாதவ் என்பவர் 42 வயது மருமகளான பூஜை என்பவரை திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மகன் இறந்து போனதால் விதவையாக இருந்த மருமகளை கைலாஷ் திருமணம் செய்துகொண்டார். கைலாஷும் மனைவியை இழந்து இருந்த நிலையில், இந்த அதிரடி முடிவை பெண்ணின் விருப்பத்துடன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Marriage, Viral Video