வனவிலங்குகளை பார்ப்பது என்பது எப்போதுமே சுவாரஸ்யமான ஒன்று தான். ஆனால் சிலருக்குத் தான் வனவிலங்குகள் ஆக்ரோசமாக வேட்டையாடும் காட்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வன விலங்குகளைப் பார்க்க விரும்பும் மக்கள், அவற்றைப் பார்ப்பதற்காக ஆபத்தான காடுகளுக்குள் செல்வதையும் விரும்புகிறார்கள். வனவிலங்குகள் சுதந்திரமாக உலாவுதை பார்க்க சிலர் பல மணிநேரம் செலவிடுகிறார்கள். பல நேரங்களில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். ஆனால் சிலருக்கும் மட்டும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதை அவர்கள் ஆர்வமுடன் தங்கள் கேமராவில் படம்பிடிக்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். அதிலும் யானை, புலிகளை பார்ப்பது என்றால் அலாதி பிரியம் தான்.
இதற்காக சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சவாரியைத் தேர்வு செய்கிறார்கள். அப்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சவாரி மேற்கொண்ட போது புலி ஒன்று மாட்டை தாக்கி வேட்டையாடும் காட்சியை காணும் வாய்ப்பு சிலருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வேட்டையாடுவதில் புலிகள் மிகவும் வல்லமை படைத்தவை. டிஸ்கவரி சேனல் போன்றவற்றில் புலிகள் ஆக்ரோசமாக வேட்டையாடும் காட்சியைப் பார்க்கும் போது நமக்கு குலை நடுங்கும். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் புலி ஒன்று மாட்டை வேட்டையாடும் காட்சியை சில சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்தது பந்தவ்கர் என்ற வனவிலங்குகள் சரணாலயத்தில் தான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற வனவிலங்குகள் சரணாலயம் தான் பந்தவ்கர்.
Also Read : ”பிரச்னை வரும்போது இதை பண்ணுங்க..” - பில்கேட்ஸ் வழங்கிய பொன்னான அறிவுரை..!
இங்கு இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான பெங்கால் டைகர்ஸ், வெள்ளைப் புலிகள் என சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் ஜங்கிள் சவாரி சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை நோக்கி திடீரென ஒரு புலி பாய்ந்து ஒரு பெரிய மாட்டை கழுத்தோடு கவ்வி சாலையின் குறுக்கே இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்தாலும் அதில் சிலர் இந்தக் காட்சியை தங்கள் கேமராவில் பதிவு செய்யவும் தவறவில்லை. அப்படி ஜெயந்த் சர்மா என்ற சுற்றுலாப் பயணியும் இந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இது அற்புதமான காட்சி என கமெண்ட்டை பதிவு செய்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tiger, Viral Video