பேருந்தை தவறவிட்டவர் ஒருவர் செய்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் மிகவும் பரபரப்பாக இருக்க கூடிய ஒரு நகரம் ஆகும். வேலைக்கு செல்வோரில் பெரும்பாலானோர் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் அதே வேளையில், சிலர் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேருந்தை தவறவிட்ட நபர் ஒருவர் செய்த காரியம் அந்த நகர சாலை போக்குவரத்தை சற்று ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் காணப்படும் நபர் குறித்த நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு செல்லாததால் பேருந்தை தவறவிட்டு விடுகிறார். இருப்பினும் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு வழியாக பேருந்தை சேஸிங் செய்து மடக்கி நிறுத்திவிட்டார். பேருந்து ஓட்டுநரிடம் கண்ணாடி வழியே தொடர்ந்து சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தார். இதனிடையே பேருந்துக்கு பின்னால் சில மீட்டர் தூரங்களுக்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பின்னால் நிற்பதை பார்த்த ஓட்டுநர், பின்னர் ஒருவழியாக பேருந்தின் கதவை திறந்து அந்த நபரை பேருந்தில் ஏற்றிச் செல்கிறார்.
Also Read : VIDEO: மேஜிக் ஷோவை சொதப்பிய தம்பி... கோபத்தில் அக்கா செய்த செயல்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பல லட்சம் லைக்குகளை பெற்று அனைவராலும் பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சிலர் அவரது மோசமான நடவடிக்கையை பாராட்டினர். எவ்வாறாயினும், எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க, பொது போக்குவரத்து வாகனங்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றுவது மற்றும் நேரத்தைப் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral Video