முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / VIDEO: பிளாஸ்டிக் குழாயில் படமெடுத்த பாம்பு.. எட்டிபார்த்தவரை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி.. வைரல் வீடியோ!

VIDEO: பிளாஸ்டிக் குழாயில் படமெடுத்த பாம்பு.. எட்டிபார்த்தவரை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி.. வைரல் வீடியோ!

பாம்பு

பாம்பு

Viral video: குழாய் ஒன்றில் விஷப்பாம்பு பதுங்கி இருந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Chennai, India

சில நேரங்களில் திடீரென ஆபத்து எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படிப்பட்ட சூழலிலும் வந்து நம்மை தாக்கக் கூடும். எனவே, நாம் தான் எப்போதும் கவனத்துடன் அலெர்ட்டாக இருக்க வேண்டும். இதை உணர்த்தும் விதமாக ஒரு திகிலான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பதை மெய்படுத்தும் விதமாக இந்த வீடியோ பார்ப்பவர்களை நடுங்கத்தான் வைத்துவிடும். வீடியோவில் ஒரு குழாய் ஒன்று தெரிகிறது. குழாயின் உள்ளே இருந்து ஒரு சப்தம் வந்துகொண்டே இருக்கிறது. வீடியோவைப் பார்க்கும் நபர்களுக்கு அது என்னவென்று முதலில் புரியாது.

ஆனால் குழாயக்கு அருகே நெருங்கியதும் அனைவரும் அதிர்ச்சியடையும் விதத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. குழாயிலிருந்து ஒரு பெரிய நாகம் திடீரென வெளியே வந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @WildLense_India ட்விட்டர் கணக்கு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில் டைவர்ஸ் கேட்கின்றனர்... உச்சநீதிமன்றம் கருத்து...!

பொதுவாக, ராஜ நாக பாம்புகள் அதிக விஷமுள்ள பாம்புகளாகும். அது கடித்தால் ஒரு சில நிமிடங்களிலேயே மரணத்தை ஏற்படுத்தும். எனவே அச்சுறுத்தும் விதமாக யாரும் எதிர்பாராத வகையில் குழாய்க்குள் நாகம் பதுங்கி இருப்பது பார்ப்போரை சில கணம் பதற வைத்து விடுகிறது.

top videos

    இந்த 19 வினாடி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பலர் எச்சரிக்கை செய்தியை கொடுத்துள்ளனர். ஏனெனில் கிங் கோப்ரா மிகவும் விஷமுள்ள பாம்பு. மிகவும் ஆபத்தானது. எனவே வீட்டில் பழைய பைப்களோ, பொருட்களோ இருந்தால், அவ்வப்போது சோதித்து பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று பலரும் கமெண்டில் கூறுகின்றனர். இல்லாவிட்டால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் இணையவாசிகள்.

    First published:

    Tags: King cobra, Viral, Viral Video