நம்மை சுற்றியிலும் எத்தனை விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் மாயத்தோற்ற பிம்பங்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? உளவியல் ரீதியாக அல்லது நேரடியாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட பிம்பங்களை கொண்டதாக இவை இருக்கும். குறிப்பாக, நமது சிந்தனை திறனுக்கு சவால் விடுப்பதாக மாயத்தோற்ற படங்கள் அமையும்.
ஒரு படத்தை நீங்கள் எத்தகைய கோணத்தில் இருந்து உற்று நோக்கி பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து அதன் வடிவம், தன்மை போன்றவை மாறும். அதுவே சாதாரணமாக பார்க்கையில் அவை உங்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும். அதுபோலத்தான் இந்த மீனியன்கள் இடையே 3 வாழைப் பழங்கள் ஒளிந்துள்ளன. அவற்றை கண்டறிவதுதான் உங்களுக்கு இன்றைய சவாலாக இருக்கும்.
படத்தை பாருங்க…
நீங்கள் பார்க்கும் இந்தப் படத்தில் 3 வாழைப் பழங்கள் மீனியன்கள் இடையே மறைந்துள்ளன. நீங்கள் பார்க்கும்போது எண்ணற்ற மீனியன்கள் நிற்பதை போன்ற காட்சி தான் மூளைக்கு தென்படும். ஆனால், மீனியன்களும் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், அதே நிறத்தில் உள்ள வாழைப் பழத்தை கண்டறிவது உங்களுக்கு சவாலானதாக இருக்கலாம்.
Read More : உங்கள் லாஜிக் சிந்தனைக்கு சவால் விடும் புதிர் இதோ… விடையை கண்டுபிடிங்க…
அதிலும், நீங்கள் வாழைப் பழத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் ஒவ்வொரு மீனியனாக உற்று நோக்கி பார்க்க தொடங்கினால் உங்களுக்கு தலைச்சுற்றல் கூட ஏற்படலாம். ஏனென்றால், ஒவ்வொரு மீனியனும் ஒவ்வொரு விதமான முக பாவனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
சவாலுக்கு மேல் சவால்….
சாதாரண வாழைப் பழத்தை கண்டுபிடிப்பது என்ன அவ்வளவு கடினமா என்று யோசித்து விடாதீர்கள். இந்த படத்தில் விடை காண முற்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குழப்பம் மிஞ்சியிருக்கிறதாம். இருப்பினும், தேடல் உணர்வு காரணமாக உங்கள் ஐக்யூ திறன் மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
15 நொடிகளில் விடையை கண்டுபிடித்தீர்களா
அனைத்து மீனியன்களையும் உற்று நோக்கிப் பார்த்த பிறகும் கூட விடையை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காக ஒரு க்ளூ தருகிறோம். படத்தில் உள்ள 3 மீனியன்கள் வாழைப்பழத்தை தங்கள் உணவுக்காக கையில் பிடித்தபடி நிற்கின்றன.
இந்த கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் உங்களால் வெகு விரைவில் விடையை கண்டுபிடிக்க இயலும். அதிலும் 15 நொடிகளில் விடையை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கவனத்திறன் மிக சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 5, 10 நிமிடம் ஆகியும் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் கீழே உள்ள படத்தை பார்த்து விடையை தெரிந்து கொள்ளுங்கள்.
நண்பர்களுக்கு அனுப்பலாம்
விடையை படத்தில் பார்த்தவுடன் இவ்வளவுதானா விஷயம் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். அதே சமயம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுக்கு இந்தப் படத்தை அனுப்பி வைத்து, அவர்களிடம் சவால் விடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral