முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உள்ளாடை தெரிய கண்ணாடி உடை.. திருமண விழாவுக்கு இப்படியா ஒரு ட்ரெஸ்! வைரலான சம்பவம்!

உள்ளாடை தெரிய கண்ணாடி உடை.. திருமண விழாவுக்கு இப்படியா ஒரு ட்ரெஸ்! வைரலான சம்பவம்!

வைரல்

வைரல்

பெண் ஒருவர் திருமண விழாவிற்கு அணிந்து வந்த உடை பெரும் அதிர்ச்சியும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

பண்டிகை நாள்கள், திருமண விழா போன்ற நிகழ்வுகளில் தான் மக்கள் தங்களை உற்சாகமாக வைத்துக்கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கும் தருணங்கள் ஆகும். குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் விழாக்களில் மணமக்களை போலவே வருகை தரும் நபர்களும் தங்களின் தோற்றத்தை சிறப்பாக காட்டிக்கொள்ள வேண்டும் என மெனக்கெட்டு முயற்சி செய்வதும் உண்டு.

சில வேலைகளில் நாம் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற நோக்கிலும் சிலர் விழாக்களுக்கு வினோத ஆடைகளை அணிந்து வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்கள். இந்த ஆடைகள் சில முறை சிறப்பாக அமைந்து பார்ப்போருக்கு பரவசத்தை தந்தாலும், சில முறை முகம் சுழிக்க வைக்கும் விதமாக அமைந்து கேலி பொருளாகவும் மாறிவிடத்தான் செய்கிறது. அப்படித்தான் பெண் ஒருவர் திருமண விழாவிற்கு அணிந்து வந்த உடை பெரும் அதிர்ச்சியும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

இது தொடர்பான செய்தியை டெய்லி ஸ்டார் நியூஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த புகைப்படம் 'thats it im wedding shaming' சமூக வலைத்தள பக்கத்தில் தான் முதலில் பகிரப்பட்டுள்ளது. அதில் அடையாளம் தெரியாத ஒரு பெண் அவள் தோழியின் திருமணத்திற்குச் சென்றுள்ளார். புகைப்படத்தில் அந்த பெண் ஒரு வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளார். அதில் பிரச்சனை என்னவென்றால் அது உள்ளே இருப்பது வெளியே தெரியும்படியிலான transparent உடைகள் ஆகும்.

இதையும் படிங்க: மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்... கேட்ட வரதட்சணையை தராததால் ஆத்திரம்...!

எனவே, அதில் பெண்ணின் உள்ளாடைகள் எல்லாம் வெளியே தெரியும் படி உடை காட்டுகிறது. இதோ கோலத்தில் அந்த பெண் பலருக்கு நடுவில் நிற்கும் புகைப்படம் தான் இணையத்தில் பரவியுள்ளது.

top videos

    வித்தியாசமாக தெரிய வேண்டும் என்ற நோக்கில் திருமணத்திற்கு அந்தப் பெண் உடுத்தி வந்த அந்த உடை, அன்றைய ஹீரோக்களான மணமக்களை விட அதிகம் பேசப்பட்ட விஷயமாக மாறியது. அத்துடன் இணையத்தில் பலராலும் வறுத்தெடுக்கப்படும் ட்ரோல் மெட்டிரியலாகவும் மாறியுள்ளார். அதே நேரம் அவருக்கு ஆதரவு குரல்களும் கிளம்பியுள்ளன. உடை அவரவர் தேர்வு மற்றும் விருப்பம் என்பதால் அதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என பலர் குரல் கொடுத்துள்ளனர்

    First published:

    Tags: Dress code, Viral News