நம்பிக்கையுடன் நாம் செய்யும் ஒரு சாதரண முயற்சி கூட திடீரென அசாதாரண பலன்களை தரும். அத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் தான், மக்கள் மிகப்பெரிய சாதனைகளை புரிகிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவரின் சிறிய முயற்சி கூட சிறப்பாக அமையும் பட்சத்தில் அது உலகின் மூளை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்து டிரென்டாகி விடுகிறது.
அப்படித்தான் ஆங்கிலேயர்களே கேட்டு ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சிறுவன் தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. @Voice4UK என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், ஆங்கிலம் பேசும் சிறுவனின் தன்னம்பிக்கையைப் பார்த்தால் நீங்களே வியப்படைவீர்கள்.
அச்சிறுவன் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். காரணம் அவனது பேச்சில் குமாவோனி என்ற பிராந்திய மொழியின் தாக்கம் தெரிகிறது. வீடியோவில் சிறுவன் ஹிந்தி, ஆங்கிலம், குமாவோனி என்று கலந்து பேச, அதை கேட்டவுடனேயே சிரித்து மகிழும் அளவுக்கு வேடிக்கையான ஸ்லாங் மொழியை கொண்டுள்ளார்.
வைரலான வீடியோவில் அச்சிறுவன் தன்னை ஒரு சுற்றுலா வலாக்கர் போல பாவித்து, மலை கிராமத்தை பற்றி ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் விவரிக்கிறான். முழு மனதுடன் ஆங்கிலத்தில் பேசி சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் சிறுவன் ஈடுபடுகிறான்.
आप भी इस बालक का कॉन्फिडेंस लेवल देख सकते हैं। हिंदी-अंग्रेजी-कुमाउनी में इसकी कॉमेंट्री देखने और सुनने लायक है। वीडियो सोशल मीडिया से शेयर किया गया है जिसका उद्देश्य मात्र मनोरंजन है। pic.twitter.com/MpUn17MM8S
— THE VOICES OF UTTARAKHAND (@Voice4UK) May 4, 2023
ஹிந்தியும் குமாவோனியும் ஆங்கிலத்தில் கலந்தவாறு அவன் தரும் முழு வர்ணனையும் ஆச்சரியத்தையும் ஜாலியான சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு வேடிக்கையாக உள்ளது. குழந்தைத்தனமாக வீடியோ முழுவதும் சீரியசாக வர்ணனை தருவது போல கேட்பதற்கு வேடிக்கையான கருத்துக்களை கூறுகிறான் அச்சிறுவன்.
இதையும் படிங்க: ஓஹொ.. இதுதான் காரணமா? உலகின் உயரமான ரயில்வே பாலத்தில் ஒரேயொரு தண்டவாளம் ஏன் தெரியுமா?
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் லைக் செய்யப்பட்டு வேகமாக பகிரப்படுகிறது. அச்சிறுவனின் தன்னம்பிக்கையை பாராட்டியும், சிறந்த எதிர்காலம் இருப்பதாக கூறியும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttarkhand, Viral Video