முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மொபைல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி..! அதிர்ச்சி வீடியோ..

மொபைல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி..! அதிர்ச்சி வீடியோ..

அதிர்ச்சி வீடியோ..

அதிர்ச்சி வீடியோ..

அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது. அங்கு அமெரிக்க மாணவி ஒருவர் பள்ளியில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்வி கற்பிக்கும் ஆசானை தெய்வத்திற்கு சமமாக நினைத்து, மரியாதை கொடுத்து அவர்களின் பேச்சை கேட்டு கீழ்படிந்து சென்ற நாட்கள் எல்லாம் மலையேறி விட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களிடத்தில் இத்தகைய மரியாதை எதிர்பார்க்க முடியவில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. அங்கு அமெரிக்க மாணவி ஒருவர் பள்ளியில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார். இந்த சம்பவம் பலரை கோபப்படுத்தியும், பலரை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவமானது ஆன்ட்டியோ ஹை ஸ்கூல் (Antioch High School) என்ற பள்ளியில் உள்ள கேமரா மூலமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. முதலில் ரெடிட் என்ற தளத்தில் பிரபலமாக பரவி வந்த இந்த வீடியோ, பின்னர் பிற சமூக வலைத்தளங்களான ட்விட்டர் போன்றவற்றிலும் பகிரப்பட்டு வருகிறது. நியூயார்க் போஸ்டில் வெளியான செய்தியின் படி, பள்ளியில் கொடுக்கப்பட்ட பாடத்திற்கான பதில்களை பெற மாணவி கூகுளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் ஆசிரியர்களை இழிவாக நடத்துவது அமெரிக்காவில் ஒன்றும் புதியது அல்ல. வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒரு உயர் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பெப்பர் ஸ்பிரேயை இரண்டு முறை தனது ஆசிரியர் மீது பயன்படுத்தி உள்ளார். ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது சமூகத்தின் மோசமான மாற்றத்தை காட்டுகிறது.

Read More : நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்..! வியந்து பார்த்த  மக்கள்..!

தான் பயன்படுத்திய மொபைல் ஃபோனை ஆசிரியர் வாங்கி வைத்ததன் காரணமாக மாணவி ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியுள்ளார். இதே ஆசிரியர் இரண்டு மாதங்களுக்கு முன்பாக மற்றொரு மாணவர் தேர்வில் தனது போனை பயன்படுத்தி பதில்களை எழுதியதற்காக கண்டித்துள்ளார். இதற்கு அந்த மாணவர் ஆசிரியரின் முகத்தில் அடித்து அவரை காயப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் பார்க்கலாம்)

Girl pepper sprays teacher because he took her phone from her in Antioch TN. This same teacher two months ago got punched in the face by a different student for taking a kids phone cheating on a test with it.
by u/Lazy_Mouse3803 in PublicFreakout

top videos

    வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கோபத்தை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். பெப்பர் ஸ்பிரே பயன்படுத்திய அந்த மாணவியின் நடத்தையை மோசமாக விமர்சித்து வருகின்றனர். "பெப்பர் ஸ்ப்ரே எவ்வளவு மோசமான ஒன்று என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைத்தனமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது." என்று ஒருவர் ரெட்டிடில் பதிவு செய்துள்ளார். ஆசிரியர்களுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என்பதாகி புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

    First published:

    Tags: Trending, Viral