நன்கு படித்து தகுதியை வளர்த்துக்கொண்ட நபர்கள் வேலைக்காக தவிப்பது ஒருபுறம் என்றாலும், உலகில் சில நிறுவனங்கள் சில வினோதமான வேலைகளை உருவாக்கி அதற்கு சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்கும் டிரெண்ட்டும் தற்போது உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையா, இதற்கு போய் இவ்வளவு சம்பளமா? என்று ஆச்சரியப்பட வைக்கும் விதமான வேலை ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்து அதிரடி காட்டியுள்ளது.
நமக்கெல்லாம் வேலைக்கு மத்தியில் போர் அடித்தால் என்ன செய்யவோம் செல்போனை எடுத்து சோசியல் மீடியாக்களில் ஏதேனும் வீடியோக்கள், போஸ்டுகளை பார்ப்போம் அல்லவா. இதையே ஒரு நிறுவனம் வேலையாக உருவாக்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.
ஆமாம், Ubiquitous என்ற அமெரிக்க நிறுவனம் டிக்டாக் வீடியோக்களை ஆர்வத்துடன் பார்க்கும் நபர்களுக்கு அதிரடி ஆஃபருடன் வேலை வழங்குகிறது. உங்களுக்கு வேலை என்வென்றால் நீங்கள் ஒரு செஷனில் 10 மணிநேரம் டிக்டாக் வீடியோக்களை பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் பார்த்தால், ஒரு மணிநேரத்திற்கு 100 அமெரிக்க டாலர் என 1,000 அமெரிக்க டாலர் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பல ஆண்டு காத்திருப்பு வீண் போகவில்லை.. ட்ரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்.!
அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.82,900 ஆகும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதை தாண்டியிருக்க வேண்டும். Ubiquitous என்ற அந்த நிறுவனத்தின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சிறந்த நபர் என்பதை விளக்க வேண்டும். டிக்டாக்கில் தற்போதைய ட்ரெண்ட் என்ன, வளர்ந்து வரும் டிரெண்ட் என்ன போன்றவற்றை இந்த நிறுவனம் ஆய்வு செய்கிறது. இதற்காக தான் இப்படி ஒரு வேலையை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.