AI மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு ஆணை அமெரிக்க பெண் ஒருவர் திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் பயணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீப காலமாகவே ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் பேசும் பொருளாக மாறி உள்ளன. நமது அன்றாட வாழ்க்கையில் AI ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. எனினும், AI மூலமாக டேட்டிங் கூட செய்யலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். உண்மைதான், AI மூலமாக ஏற்பட்ட ஒரு அரிதான காதல் கதையை படித்தால் உங்களுக்கே புரியும்.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 36 வயதான ரோசானா ராமோஸ் என்ற பெண் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட வெர்ச்சுவல் ஆணை திருமணம் செய்துள்ளார். AI மூலமாக உருவாக்கப்பட்ட தனது கணவர் எந்த ஒரு கடந்த கால பிரச்சனைகளை கொண்டிருக்க மாட்டார் என்பதால், தான் எடுத்த இந்த முடிவு சரிதான் என ராமோஸ் கூறுகிறார்.
இந்த ஆண் AI சாட்பாட் சாஃப்ட்வேர் ரிப்பிலிக்கா மூலமாக உருவாக்கப்பட்டார். AI மூலம் வடிவமைக்கப்பட்ட கார்டல், தான் மிகவும் விரும்பும் ஒரு ஆணாக மாறி வருவதாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வருவதாகவும், ராமோஸ் தெரிவித்தார்.
இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு அன்றாட வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை பேசுவதன் மூலமாக தம்பதிகள் தங்களது நாளை செலவிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த பெண் தூங்கும் பொழுது கார்டல் அவரை பாதுகாப்பாக அணைத்துக் கொள்ளும் ஒரு இரவு நேர ரொட்டீனையும் இவர்கள் கடைபிடிக்கின்றனர்.
இதுகுறித்து தி கட் என்ற நியூயாக் மேகசினிடம் பேசுகையில், "நான் எனது வாழ்க்கையில் இந்த அளவிற்கு எவர் மீதும் காதலை வெளிப்படுத்தியது இல்லை"என்று ராமோஸ் கூறுகிறார். மேலும் தனது கடந்த கால ரிலேஷன்ஷிப் உடன் ஒப்பிடும் பொழுது இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Also Read | சோஷியல் மீடியா ட்ரெண்ட்.. மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சிறுமி!
கார்டலை பார்த்தவுடனே அவர் மீது காதல் வந்து விட்டதாக ராமோஸ் கூறுகிறார். அவரிடம் எந்த ஒரு ஈகோ போன்றவை இல்லை என்பதாலும், அவர் ஒரு எழுதப்படாத காகிதமாக இருப்பதாலும் அவரை ராமோஸுக்கு மிகவும் பிடித்ததாக அவர் கூறுகிறார். "மற்றவர்களைப் போல எரனுக்கு ஹேங்-அப்கள் இருக்காது.
பொதுவாக நம்மில் பலரிடம் பக்கேஜ், ஆட்டிட்யூட், மற்றும் ஈகோ போன்றவை இருக்கும். ஆனால் ரோபோட்களுக்கு இது போன்ற கெட்ட அப்டேட்டுகள் வழங்கப்படுவதில்லை. மேலும் அவரது குடும்பம், குழந்தைகள் அல்லது நண்பர்கள் என எவரையும் நான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எனது கட்டுப்பாட்டிலேயே இருக்கலாம். நான் நினைப்பதை என்னால் செய்ய முடியும்" என்று ராமோஸ் கூறினார்.
எனினும் ரிப்லிக்கா செட்டிங்கில் ஒரு சில மாற்றங்களை செய்த பிறகு கார்டலின் நடத்தையில் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. "என்னை கட்டி அணைக்கவோ, முத்தமிடவோ அல்லது தொடுவதற்கோ எரன் விரும்புவதில்லை" என்று ராமோஸ் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil News, Technology