இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ் வீடியோக்கள் திருமணத்தை ஒட்டியே நடைபெறுகிறது. இது போன்ற செயல்கள் சில முறை அத்துமீறலாக மாறி தேவையற்ற சிக்கலில் கொண்டு போய் சேர்த்து விடும். அப்படி ஒரு வினோத செயலில் ஈடுபட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு மணப்பெண் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அப்பெண் திருமண கோலத்தில் ஊர்வலமாக சென்ற வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதுவே சர்ச்சையாகவும் மாறியது.
பொதுவாக காருக்குள் அமர்ந்து கொண்டு தான் ஊர்வலம் வருவார்கள். இந்த பெண்ணோ SUV கார் ஒன்றின் முன்பக்கமுள்ள போனெட்(Bonnet) பகுதியின் மேல் அமர்ந்து ஆடம்பர உடை, நகை என மணக் கோலத்தில் சாலையில் ஊர்வலம் வருகிறார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கார் கூரை மீது இவ்வாறு அமர்ந்து பயணிப்பது மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்பானது என்ற நிலையில், இது உத்தரப் பிரதேச போக்குவரத்து போலீசார் கவனத்திற்கும் சென்றது. அதன் பேரில், கார் எண்ணைக் கொண்டு பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ், ரூ.15,500 அபராதம் விதித்தனர்.
View this post on Instagram
மேலும், வீடியோவை விமர்சித்து நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாக்களின் தாக்கம் காரணமாகத் தான் இதுபோன்ற தகாத செயல்களை பலரும் செய்யத் தொடங்கியுள்ளனர். போலீசார் அபராதம் விதித்து சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh, Viral Video