ஒவ்வொருவரும் பல கனவுகள் மற்றும் ஆசைகளோடு திருமணம் செய்துகொள்வோம்.. ஆசை 60 மோகம் 30 நாள்கள் என 90 நாள்கள் ஜாலியாக வாழ்வதே இன்றைக்கு பலருக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஈகோ, சண்டை என பல காரணங்களுக்காக திருமணமாகி ஒரு மாதத்திலேயே பிரிந்து விடும் பலரையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தன்னுடைய 75 வயதில் இதுவரை 8 முறை திருமணம் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். யார் இவர்? என்ன நடந்தது? இவருடைய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்வோம்..
8 முறை திருமணம் செய்த இங்கிலாந்து நபர்…
இங்கிலாந்தைச் சேர்ந்த 75 வயதான ரான் ஷெப்பர்ட் என்பவருக்கு இதுவரை எட்டு முறை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1996 ஆம் ஆண்டு மார்கரெட் என்பவருடன் முதல் திருமணம் நடந்துள்ளது. இந்த ஜோடிக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தான் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு விவாகரத்து செய்துள்ளனர்.பின்னர் இரண்டாவது திருமணம் கடந்த 1973 ல் ஜீனெட்டுடன் ஒரு ஆண்டு நீடித்துள்ளது.
பின்னர் 1976 ல் 3 வது முறையாக திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தார் ரான் ஷெப்பர்ட். அதன் பிறகு கடந்த 1982 ல் கேத்தி என்பவரையும், கடந்த 1986 ல் சூ என்பவரையும் திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த உஷா என்ற பெண் கடந்த 1999 ல் ரான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாலும் சில காலம் தான் வாழ்ந்துள்ளார். தொடர்ச்சியாக கடந்த 2003 ல் வானையும், வெங்கையும் மணந்தார். இவர்களது திருமண வாழ்க்கை 13 ஆண்டுகள் நீடித்துள்ளது.
Read More : சந்தோஷமாக வாழ இலவசமாக வகுப்பெடுக்கும் பின்லாந்து... நீங்களும் விண்ணப்பிக்கலாம்...
இதுக்குறித்து பேசிய ரான் ஷெப்பர்ட், தனியாக வாழ பிடிக்கவில்லை என்ற மனநிலையில் தான், நான் பல பெண்களைத் திருமணம் செய்துக்கொண்டேன் என தெரிவிக்கிறார். மேலும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளுடன் ஜாலியாக வாழ்க்கையை நகர்த்தித் தான் வந்தேன். ஆனால் தற்போது என்னை விவகாரத்து செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தன்னுடைய உடலைத் தேய்த்துப் போகும் அளவிற்குப் பயன்படுத்திவிட்டனர் என்றும், இவ்வாறு இவர்கள் கொடுத்துள்ள விவாகரத்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது எனத் தெரிவிக்கிறார்.
75 வயதில் பாதுகாப்பு மையத்தில்.. இளம் வயதில் பெண்களுடன் ஜாலியாக வாழ்க்கையை நடத்தியதன் விளைவு தான் தற்போது பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா, சிஓபிடி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்த சூழலில் தான் தற்போது அனைவரும் பிரிந்து சென்றுள்ள நிலையில், தன்னைக் கவனித்துக் கொள்வதற்காக பராமரிப்பு இல்லத்திற்குச் சென்றுள்ளார். இவர்கள் ஒரு நாளைக்கு 3 முறை எனக்கு உதவி செய்கிறார்கள். உணவு வழங்கி என்னை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார் என தெரிவிக்கிறார்.
என்னதான் இளம் வயதில் ஜாலியாக 8 பெண்களைத் திருமணம் செய்திருந்தாலும் கடைசியில் நம்மிடம் ஒன்றும் இல்லை என்றால் விட்டு சென்றுவிடுவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்கிறார் ரான் ஷெப்பர்ட். இவர்தான் அதிக முறை திருமணம் செய்துக் கொண்ட நபர் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.