நம்மை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள சோப் அவசியம் என்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் உண்டு தான். இருப்பினும், அந்த எண்ணத்தை சற்று ஓரம் கட்டி வைத்துவிட்டு, இணையத்தில் நடந்த இந்த ருசிகரமான வார்த்தைப் போர் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது, கைகளை கழுவுவதற்கு சோப் அவசியமற்றது என்றும், இன்னும் சொல்லப்போனால் அது ஆபத்தானது என்றும் டிவிட்டரில்வர ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுகுறித்த அவரது பதிவில், “சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை சோப்பால் கழுவுவதை நிறுத்துங்கள். சாதாரணமாக தண்ணீர் வைத்து கழுவினால் போதுமானது. கிருமிகளை எதிர்கொள்ள உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியே போதுமானது. நீங்கள் சோப் பயன்படுத்தினால் அது வயிற்றில் சேரும்.
https://twitter.com/LifeMathMoney/status/1655429317231247363
வயிற்றில் நன்மை பயக்கும் பாக்டீரியாவை சோப் அழித்துவிடும். உலக நாடுகள் பலவற்றில் பெரும்பாலான மக்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இவரது பதிவு பல சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு அவர் மீண்டும் விளக்கம் அளித்தார். “நான் சொல்வது முட்டாள்தனமானது என்று நீங்கள் கருதினால் இந்த வீடியோவை பாருங்கள். சோப் வைத்து கை கழுவிய பின்னர் நீங்கள் சாப்பிட்டால், கைகளில் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும் சோப்பையும் சேர்த்து விழுங்குவீர்கள். என்னதான் திரும்ப, திரும்ப கைகளை கழுவினாலும் சோப் உங்கள் கையை விட்டு முழுமையாக நீங்காது. இது உடல் நலனுக்கு நல்லது என்று ஒருபோதும் சொல்லவே முடியாது’’ என்று கூறியிருந்தார்.
இந்த டிவிட்டர் பதிவுக்கு அதிகப்படியான பயனாளர்கள் லைக் செய்திருந்த நிலையில், இது தவறான விளக்கம் என்று எடுத்துக் கூறுவது அவசியம் என்று சிலர் கருதினர். சோப் பயன்படுத்தினால் எந்தவித தீங்கும் ஏற்படாது என்று சிலர் விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் அளிக்கத் தொடங்கினர். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.
பயனாளர் ஒருவர் வெளியிட்ட கமெண்டில், “இந்தப் பதிவாளருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் மருத்துவர் சோப் வைத்து கைகளை கழுவ வேண்டாம் என்று இவர் கூறுவாரா’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “சோப் மூலமாக ஒரு மெக்கானிக்கல் நடவடிக்கை நடைபெறுகிறது. சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை இது நீக்கம் செய்கிறது. வெறுமனே தண்ணீரை மட்டும் பயன்படுத்தினால் அவ்வளவு தூரம் கிருமிகள் நீங்காது. சோப் பயன்படுத்துவது கவலைக்குரிய விஷயமாக உங்களுக்கு இருப்பின், தரமான பொருளாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் வாசிக்க: வாட்டர் பாட்டிலின் உள்பக்கத்தை சுத்தம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா..? உங்களுக்கான ஈஸி டிப்ஸ்..!
உலக நாடுகள் சிலவற்றில் அலர்ஜியை கண்டறியும் அளவுக்கு சுகாதாரக் கட்டமைப்பு மேம்படவில்லை என்பதால் அங்கு இதுகுறித்த கணக்கெடுப்பு தவறியிருக்கலாம் என்றும், ஆனால் அனேக நாடுகளில் முறைப்படி கணக்கெடுப்பு நடத்துவதால் தான் இந்த எண்ணிக்கை தெரிய வருகிறது என்று மற்றொரு யூஸர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.