முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பாலோ செய்தார் எலான் மஸ்க்

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பாலோ செய்தார் எலான் மஸ்க்

எலான் மஸ்க் - பிரதமர் மோடி

எலான் மஸ்க் - பிரதமர் மோடி

அவர் ட்விட்டரை வாங்கிய போது, அவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியாக அதிகரித்தது.

  • Last Updated :
  • inter, IndiaAmericaAmerica

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கியதில் இருந்த பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் தொடர்ச்சியாக செய்திகளில் இடம்பிடித்தவாறு இருந்து வருகிறார். அவர் ட்விட்டரை வாங்கிய போது, அவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியாக அதிகரித்தது. ஆனால், எலான் மஸ்க் உலகம் முழுவதிலும் இருந்து வெறும் 195 பேரை மட்டுமே பின்தொடர்ந்து வந்தார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது இடம்பெற்றுள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதில் இருந்து இந்தியாவிற்கு சற்று பாதகமான செயல்களை செய்து வருகிறார். குறிப்பாக அதன் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் உட்பட ஏராளமான இந்தியர்கள் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

top videos

    இந்நிலையில், திடீரென்று இந்திய பிரதமரை எலான் மஸ்க் பின்தொடர வேண்டிய தேவை என்ன என்று இணையவாசிகள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தை தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளாரா என்றும் டிவிட்டர் பயனாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    First published:

    Tags: Elon Musk, PM Narendra Modi, Twitter