முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாக்கடையில் சிக்கய 6 குட்டிகள்.. 15 நாட்கள் நகராமல் காத்திருந்த தாய் நாய்..!

சாக்கடையில் சிக்கய 6 குட்டிகள்.. 15 நாட்கள் நகராமல் காத்திருந்த தாய் நாய்..!

மீட்கப்பட்ட நாய்

மீட்கப்பட்ட நாய்

அங்கிருந்து நகராமல் அந்த நாய் குரைத்துக் கொண்டு இருப்பதை அப்பகுதியினர் கவனித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்

  • Last Updated :
  • Tiruppur, India

15 நாட்களாக சாக்கடையில் சிக்கித் தவித்த 6 நாய் குட்டிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் பல்லடம் பகுதியில் சில நாட்கள் முன் நாய் ஒன்று 6 குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகள் அங்கு சுற்றி திரிந்த போது அருகில் இருந்த சாக்கடையில் ஒன்றன் பின் விழுந்தது. 15 நாட்கள் கடந்த நிலையில் குட்டிகளை காப்பாற்ற முடியால் தாய் தவித்து வந்தது. அங்கிருந்து நகராமல் அந்த நாய் குரைத்துக் கொண்டு இருப்பதை அப்பகுதியினர் கவனித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்து 6 நாய் குட்டிகளையும் மீட்டனர்.

top videos

    மீட்கப்பட்ட நாய்க்குட்டிகளை வாஞ்சையுடன் தாய் நாய் கொஞ்சியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

    First published:

    Tags: Dog, Facebook Videos, Viral Video