முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 19 மாடி கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.. வியக்க வைக்கும் வீடியோ!

19 மாடி கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.. வியக்க வைக்கும் வீடியோ!

கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.!

கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.!

தென்கிழக்கு சீனாவின் Chongqing-ல் மக்கள் பயன்படுத்தும் மோனோ ரயில் பாதை முற்றிலும் வித்தியாசமாக 19 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் வழியே செல்கிறது.

  • Last Updated :
  • internat, Indiachinachina

சீனாவின் மைய பகுதியில் அமைந்துள்ள பரபரப்பான நகரம் Chongqing. இந்த பரந்த பெருநகரத்தில் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள், எனவே இது உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த நகரம் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஜன நெரிசல்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவமான ஈர்ப்பை கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் ரயில் போக்குவரத்து தான். ரயில் போக்குவரத்தில் எப்படி தனித்துவத்தை கொண்டுள்ளது என்ற கேள்வி எழலாம். இங்கே நாம் பார்க்க போகும் ரயில் போக்குவரத்து பற்றிய தகவல் உங்கள் சராசரி போக்குவரத்து போன்றதல்ல. சற்று வித்தியாசமானது.

நகரங்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் காலையில் வேலைக்கு செல்ல மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வது வழக்கமான ஒன்று. அது சாலைகளின் மேலே செல்லும். ஆனால் தென்கிழக்கு சீனாவின் Chongqing-ல் மக்கள் பயன்படுத்தும் மோனோ ரயில் பாதை முற்றிலும் வித்தியாசமாக 19 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் வழியே செல்கிறது. ஆம், மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் வழியே செல்லும் மோனோ ரயில் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது. அடுக்குமாடி கட்டிடத்தின் நடுவில் ரயில் கடந்து செல்வதை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

Read More : 8 அடி 3 இன்ச் நீள தாடி… சொந்த கின்னஸ் சாதனையை முறியடித்த சீக்கியர்!

பல உயரமான கட்டிடங்களை கொண்டிருப்பதற்காக "மவுண்டைன் சிட்டி" என்று அழைக்கப்படும் Chongqing பெருநகரம் 31,000 சதுர மைல்களுக்குள் மில்லியன் கணக்கான மக்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த நகரத்தின் தனித்துவமான நிலப்பரப்பு மற்றும் அதிக கட்டுமான அடர்த்தி காரணமாக, ரயில்வே எஞ்சினியர்ஸ் மற்றும் சிட்டி பிளானர்ஸ், ஒரு முக்கிய மோனோரயில் பாதையை உருவாக்க ஒரு தனித்துவ வழியை செயல்படுத்த வேண்டியிருந்தது. இந்த மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்த போது 2 ஆப்ஷன்கள் மட்டும் தான் இருந்தன. ஒன்று மோனோ ரயில் பாதைக்காக முழுஅடுக்குமாடி கட்டிடத்தையும் ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்துவது அல்லது 2 ஃப்ளோர்களை மட்டும் க்ளீன் செய்து ரயில் செல்ல ஏதுவாக ஒரு tunnel-ஐ உருவாக்குவது. வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும் நிபுணர்கள் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்ததது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே Light rail அதன் ஸ்மோக்-ஃப்ரீ டிசைன் மற்றும் குறைந்த சத்தம் மற்றும் லோ வைப்ரேஷன் லெவல் காரணமாக சீனாவின் அமைதியான ரயில் லைன்ஸ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. எனவே இந்த ரயில் அதன் இயக்கத்தின் போது சுமார் 60 டெசிபல் சத்தத்தை மட்டுமே உருவாக்கும் என்பதால் குடியிருப்பாளர்கள் ஒலி மாசுபாடு பற்றி அச்சம் அல்லது கவலைப்பட தேவையில்லை. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நடுவில் மோனோ ரயில் ரயில் கடந்து செல்வது உங்களுக்கு வித்தியாசமாக இல்லை என்றால், மற்றுமொரு சுவாரசிய தகவலை உங்களுக்கு சொல்கிறோம். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு பேசேஞ்சர் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

top videos

    19 அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மற்றும் எட்டாவது தளங்களுக்கு இடையில் இந்த மோனோரயில் நிலையம் அமைந்துள்ளது, மேலும் இதன் புதுமையான வடிவமைப்பு மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த நகரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை சேமித்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களால் சூழப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நடுவில் பயணிகள் மோனோ ரயிலில் ஏறலாம் மற்றும் இறங்கலாம். தவிர இந்த கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடு இருக்கும் அதே கட்டிடத்தில் மோனோ ரயிலில் பயணிப்பதற்கான வசதியை பெற்றுள்ளார்கள்.

    First published:

    Tags: China, Trending, Viral