முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தனது சொந்த யூடியூப் சேனலை சூப்பராக ப்ரமோட் செய்யும் ஜூஸ் விற்பனையாளர்.! - ட்விட்டரில் வைரல்..!

தனது சொந்த யூடியூப் சேனலை சூப்பராக ப்ரமோட் செய்யும் ஜூஸ் விற்பனையாளர்.! - ட்விட்டரில் வைரல்..!

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

சாலையோர ஃப்ரெஷ் ஜூஸ் கடை உரிமையாளரின் கதை நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. சோஷியல் மீடியாவை புத்திசாலித்தனமான முறையில் பயன்படுத்தி கொள்ளும் ஒரு  ஜூஸ் கடை ஓனரை பற்றி ட்விட்டர் யூஸர் குறிப்பிட்டுள்ளார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாக்கள் என்பவை நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் கிடைக்க கூடிய பிளாட்ஃபார்மாக இருக்கிறது. இதில் யூடியூப் போன்ற சோஷியல் மீடியாக்கள் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நம்பமுடியாத வாய்ப்புகளை கொடுத்து உள்ளன.

இதனை அடுத்து இப்போதெல்லாம் பலரும் தங்கள் வழக்கமான தினசரி வேலைகள் அல்லது பிசினஸில் ஈடுபடுவதை தவிர சோஷியல் மீடியாக்களில் கன்டென்ட்ட் கிரியேட்டர்களாக மாற விரும்புகிறார்கள். கன்டென்ட் கிரியேஷன் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஏராளமான வேலைவாய்ப்புகளையும், செலிபிரிட்டிகளையும் உருவாக்கியுள்ளது.

தவிர யூடியூப் மற்றும் இன்ஸ்டா போன்ற சோஷியல் மீடியாக்கள் மக்கள் தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக மற்றும் பாசிட்டிவாக பயன்படுத்தி உதவுகின்றன. இது ட்விட்டர் யூஸர் ஒருவரால் ஷேர் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ட்விட்டின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. Keshav Lohia என்ற அந்த ட்விட்டர் யூஸர் 2K சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனலை நடத்தி வரும் பெங்களூரில் உள்ள ஒரு ஜூஸ் விற்பனையாளரின் கதையை ஹைலைட் செய்து உள்ளார்.

Read More : மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தை...165 கிலோ உடல் எடையை குறைத்த நபர்.. சாத்தியமானது எப்படி?

சாலையோர ஃப்ரெஷ் ஜூஸ் கடை உரிமையாளரின் கதை நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. சோஷியல் மீடியாவை புத்திசாலித்தனமான முறையில் பயன்படுத்தி கொள்ளும் ஒரு  ஜூஸ் கடை ஓனரை பற்றி ட்விட்டர் யூஸர் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு பெல்லந்தூரில் இருக்கும் அந்த சாலையோர ஜூஸ் கடையின் ஃபோட்டோவை ஷேர் செய்து உள்ளார். அவர் ஷேர் செய்துள்ள அந்த ஜூஸ் ஸ்டாலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஜூஸ் விற்பனையாளர் உண்மையில் தான் சொந்தமாக நடத்தும் யூடியூப் சேனலை விளம்பரம் செய்திருப்பது தான்.

அதுவும் QR code மூலம். அந்த ஜூஸ் கடை ஓனர் தனது யூடியூப் சேனலை விளம்பரப்படுத்த தனது வண்டியில் QR code-ஐ எவ்வாறு சேர்த்தார் என்பதை ட்விட்டர் யூஸர் Keshav Lohia விளக்கி இருக்கிறார். இவர் ஷேர் செய்துள்ள ஃபோட்டோவில் பழங்கள் நிரப்பப்பட்ட தனது வண்டியின் முன் ஜூஸ் விற்பவர் நிற்பதை காண முடிகிறது. அவரது Cart-ல் என்னுடைய யூடியூப் சேனலின் பெயர் "Kum Kum Mridha" என்று எழுதப்பட்ட QR Code-ஐ இமேஜில் காணலாம்.

இந்த ஜூஸ் கடைக்காரரின் புத்திசாலித்தனமான ஐடியா பற்றி கூறி இருக்கிறார் இந்த வைரல் இமேஜை ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார் ட்விட்டர் யூஸரான Keshav Lohia . இவர் தனது ட்விட்டில் “நேற்று, நான் பெல்லந்தூரில் உள்ள இந்த ஜூஸ் விற்பனையாளரிடம் இருந்து ஃபிரெஷ் ஜூஸ் சாப்பிட்டேன். இவர் தனது வண்டியில் காமன் பார்கோடுகளை டிஸ்ப்ளே செய்து 2k சந்தாதாரர்களுடன் தான் சொந்தமாக நடத்தி வரும் யூடியூப் சேனலை பார்வையிட விளம்பரப்படுத்தினார்! இவரின் இந்த ஐடியா மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று கூறி ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்.

இந்த ட்விட்டை பார்த்த பல யூஸர்கள் தனது யூடியூப் சேனலை ப்ரமோட் செய்ய அந்த ஜூஸ் கடைக்காரர் செயல்படுத்திய QR code ஐடியாவை சூப்பர் என புகழ்ந்துள்ளனர். இந்த ட்வீட் லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களையும், 900-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது. எந்த விஷயத்திலும் சிறந்ததைச் செய்ய விரும்புபவர்களால் இவர் கண்டிப்பாக ஈர்க்கப்படுவார் என ஒரு யூஸர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

First published:

Tags: Trending News, Trending Video, Viral