முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நீங்களா வேலைய விட்டு போனா ஒரு வருஷ சம்பளம் போனஸ்...! நிறுவனங்கள் வைக்கும் புது டிவிஸ்ட்

நீங்களா வேலைய விட்டு போனா ஒரு வருஷ சம்பளம் போனஸ்...! நிறுவனங்கள் வைக்கும் புது டிவிஸ்ட்

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

லே ஆஃப் செயல்முறையை விரைவுப்படுத்த கூகுள் நிறுவனம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஊழியர்கள் குழுவின் உதவியை நாடியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் லே ஆஃப் என்ற பெயரில் 1.60 லட்சம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. சிலிக்கான் வேலியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்த லே ஆஃப் காரணமாக உலகெங்கும் உள்ள பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் இதை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், வினோதமான வழிமுறை ஒன்றை அமேசான் அறிவித்துள்ளது. அதாவது, நீங்களாக வேலையை விட்டுப் போனால், ஒரு வருட சம்பளம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. வேலை போனாலும் ஓராண்டுக்கு சம்பளம் என்பதை ஊழியர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்.

"ஐரோப்பாவிலுள்ள ஒரு சில நாடுகளில், ‘பணியாளர் நலன் குழுக்கள்’ (Employee interests Groups)உடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் லே ஆஃப் என்ற பெயரில் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது. ஊழியர்களின் விதிப்படி, நிறுவனங்கள் சட்டபூர்வமாக இதுபோன்ற கவுன்சில்களுடன் கலந்துரையாடிய பிறகே லே ஆஃப் களை அமல்படுத்த முடியும். இந்த கலந்துரையாடலை நிறைவுசெய்ய எக்கச்சக்கமான நேரம் செலவாவதுடன் இதற்கு பலவிதமான தரவுகளை சேமிக்க வேண்டியிருக்கும் மற்றும் இது பல செயல்முறைகளை உள்ளடக்கியது.

Read More : தக்காளி ’பழமா' அல்லது 'காய்கறியா'? குழப்பத்தை ஏற்படுத்திய கேள்விக்கு கிடைத்த பலே பதில்!

லே ஆஃப் செயல்முறையை விரைவுப்படுத்த கூகுள் நிறுவனம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஊழியர்கள் குழுவின் உதவியை நாடியுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பிரான்சில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு அட்டகாசமான ஆஃபரை வழங்கியுள்ளது. அதன்படி தாமாக முன் வந்து வேலையை விட்டு செல்லும் நபர்களுக்கு ஒரு வருட சம்பளம் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. UK-ல் உள்ள 8,000 ஊழியர்களில் 500 ஊழியர்களை இது போன்ற ஆஃபரை வழங்கி வேலையை விட்டு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கு ஊழியர்கள் குழுவுடன் ஆல்பபெட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. டப்ளின் மற்றும் சூரிச்சில் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தில் 5 முதல் 8 வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஒரு சில சீனியர் மேனேஜர்கள் தாமாக முன்வந்து பணியில் இருந்து விடைபெற முடிவு செய்தால் அவர்களுக்கு செவரன்ஸ் பேக்கேஜாக ஒரு வருட சம்பளம் வழங்கப்படும்.

இதே போல ஜெர்மனியிலும் வாலண்டரி ரெசிக்னேஷன் என்ற முறை மூலமாக லே ஆஃப் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. கடந்த வாரம் அமேசான் நிறுவனம் தனது வீடியோ கேம் பிரிவில் பணிபுரிந்த 100 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Trending, Viral