உலகின் மிகவும் குட்டையான நாயாக அமெரிக்காவில் இருக்கும் பேர்ல் என்ற நாயை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கின்னஸ் நிறுவனம். அதன் எடை வெறும் அரை கிலோ தான். உலகில் அரிதான மற்றும் அதிசயமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அதோடு, நம்பவே முடியாத சில அரிதான நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
அது போன்ற சம்பவங்களையும், மனிதர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது கின்னஸ் உலக சாதனை நிறுவனம். அந்த நிறுவனம் அண்மையில் உலகின் மிகவும் குட்டையான நாயாக பேர்ல் என்ற ஒரு நாளை அதிகாரப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த நாய் தொடர்பான முழு விபரங்கள் இதோ…
அமெரிக்காவின் ஆர்லண்டோ மாகாணத்தில் வசிப்பவர் வனேசா செம்லர். இவருக்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம். அவர் வளர்த்த நாய் கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குட்டி ஒன்று ஈன்றது. அதற்கு பேர்ல் எனப் பெயர் சூட்டினார். குட்டியாக இருந்த நாய் வளரும் வளரும் என எதிர்பார்த்தார் செம்லர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த நாய் வளரவேயில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த நாயின் உயரம் வெறும் மூன்றரை இன்ச் தான். நீளம் ஐந்து இன்ச் தான்.
Read More : ஆண்களை விரட்டி விரட்டி அடிக்கும் பெண்கள்... ஜோத்பூரில் கொண்டாடப்படும் விநோத திருவிழா
அதாவது அமெரிக்காவின் ஒரு டாலர் நோட்டின் சைஸ் தான் இந்த நாயின் உருவம். அதன் எடை வெறும் 559 கிராம். இந்த நாயின் உயரம், நீளம் மற்றும் எடை தொடர்பான விபரங்களை பரிசோதித்து அதிகாரப்பூர்வமாக சான்றளித்திருக்கிறார் ஆர்லாண்டோ மாகாண கால்நடை மருத்துவமனை மருத்துவர் கியோவான்னி வெர்கெல்.
இதற்கு முன்னதாக உலகின் மிகவும் குட்டையான நாய் என்ற பெருமையை பெற்றிருந்தது மிராகிள் மில்லி என்ற நாய். அந்த நாயின் உரிமையாளரும் செம்லர் தான்.
This is Pearl, the two-year-old Chihuahua with a big personality and the record for being the shortest dog alive today 🥰️ pic.twitter.com/rUjydX9A4T
— Guinness World Records (@GWR) April 12, 2023
பேர்ள் என்ற இந்த குட்டி நாய்க்கு விதவிதமான ஆடைகள் அணிவது என்றால் கொள்ளைப் பிரியமாம். சிக்கன் மற்றும் சால்மன் மீன் பேர்ளின் விருப்ப உணவாம். அண்மையில் பேர்ளை செம்லர் இத்தாலியின் மிலன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இந்த நாயை இத்தாலியின் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடியும் வரை சமர்த்தாக அமர்ந்திருந்தது பேர்ள்.
கின்னஸ் நிறுவனம் பேர்ள் குறித்த 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் க்யூட்டாய் குட்டியாய் இருக்கும் பேர்ளை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த நாய் எங்களுடன் இருப்பது எங்கள் பாக்கியம் என்று சிலாகித்து சொல்லியிருக்கிறார் உரிமையாளர் வனேசா செம்லர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.