முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நர்மதா ஆற்றில் வலம் வந்த பெண்.. தெய்வமாக வழிபட்ட மக்கள்.. யார் இவர் உண்மை என்ன?

நர்மதா ஆற்றில் வலம் வந்த பெண்.. தெய்வமாக வழிபட்ட மக்கள்.. யார் இவர் உண்மை என்ன?

நர்மதா ஆற்றில் வலம் வந்த பெண்..!

நர்மதா ஆற்றில் வலம் வந்த பெண்..!

இணையத்தில் நர்மதைத் தாய் வந்துவிட்டாள் என்றும் அவளிடம் ஆசியைப் பெற வேண்டி மக்கள் குழும்பிய கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு இணைய பயன்பாட்டின் ஆதிக்கத்தில் தான் நாம் ஒவ்வொரு நாளும் பயணித்து வருகிறோம். இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் பல சுவாரஸ்சியமான வீடியோக்கள் பதிவாவதோடு சில நேரத்தில் இணையத்தில் அது டிரெண்ட்டிங்கிலும் இருக்கும். அப்படித் தான் சில தினங்களுக்கு முன்னதாக நர்மதை ஆற்றின் மேல் ஒரு வயதான பெண்மணி நடப்பது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலானது.

அதில் ஆற்றில் நடந்து வருவது நர்மதைத் தாய் என்றும், அவரிடம் ஆசிப் பெறுவதற்காக நர்மதா நோக்கி மக்கள் நடந்து செல்வது போன்று வீடியோவில் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோப் பார்த்த காவல்துறையில் உண்மையில் என்ன நடந்தது? யார் அந்த பெண்மணி என விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது தான் இந்த வீடியோவின் உண்மை என்ன என்பது தெரியவந்தது. இதோ நாமும் தெரிந்துக்கொள்வோம்..

வைரல் வீடியோவில் உள்ள உண்மை என்ன?.... இணையத்தில் நர்மதைத் தாய் வந்துவிட்டாள் என்றும் அவளிடம் ஆசியைப் பெற வேண்டி மக்கள் குழும்பிய கூட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதோடு வீடியோவும் வைரலான நிலையில் காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அப்போது ஆற்றில் நடந்து சென்ற பெண், ஜோதி ரகுவன்ஷி என்பது தெரியவந்தது. மேலும் அவர் நர்மதாபுரத்தில் வசிப்பதாகவும், கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக குடும்பத்திற்கு சில வேண்டுதல்களை செய்ய வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான நர்மதா ஆற்றில் வலம் வந்து வழிபாடு நடத்தி வருவதாகவும், சில நேரங்களில் இங்கு வரும் பெண்களுக்கு நாட்டு மருந்துகளை வழங்கி வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Read More : ரூ.24 லட்சம் செலவு.. உடலை ஆபரேஷன் செய்து ஏலியன் போல மாறிய நபர்..!

இதுகுறித்து தகவல் தெரிவித்த காவல்துறையினர், தற்போது நடைபெற்ற விசாரணையில் வயதான அந்த பெண்மணி யார்? என்று கண்டறிந்துவிட்டதாகவும், இன்னும் சில தினங்களில் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதோடு ஆற்றில் ஆழம் அதிமாக இல்லாத பகுதிகளில் நடந்து வந்தார் எனவும், ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் நீந்தியும் வந்தது தான் பார்க்கும் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமக்கு ஆசி வழங்க நர்மதா தேவியே வந்துவிட்டார் என நினைக்கத் தொடங்கிவிட்டனர் என தகவல் தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

top videos

    குறிப்பாக இப்பெண்யை சுற்றி தான் அதிக கவனமும், புகழும் இணையத்தில் இருந்தப்போதும், ஜோதிபாயின் குடும்பத்தினர் இவரைக் காணவில்லை என நர்மதா புரத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், மூட நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கும் வரையிலும், கூடிய விரைவில் இதுப்போன்று தான் நடக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் புகழுக்காக இப்பெண்மணி யார் என்பதை மறைத்திருக்கலாம்.. ஆனால் அவ்வாறு செய்யாத போது இவரின் நேர்மை வெளிப்படுகிறது எனவும் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

    First published:

    Tags: Trending, Viral