நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அந்த சிறப்பு தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் உரிமை. விருந்தினர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காதபடி பெரும்பாலானோர் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். இதற்காக மிகவும் மெனக்கெடுகிறார்கள். ஆனால் ஒரு ஜோடி தங்கள் திருமணத்தில் செய்த ஒரு விஷயம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர்கள் கொடுத்த திருமண அழைப்பிதழில், விருந்தினர்களுக்கு பல விசித்திரமான நிபந்தனைகள் இருந்தன.
இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகனும், மணமகளும் பார்க்கவே வினோதமாக இருக்கும் வகையில் பல நிபந்தனைகளை பத்திரிக்கையில் அச்சிட்டுள்ளனர். 2025-ல் திருமணம் நடக்க உள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழ்கள் இப்போதிருந்தே விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அழைப்பிதழ் மட்டுமல்ல, அதைக் கொடுக்கும் விதமும் மிகவும் மோசமாக இருந்ததாக பலர்பேஸ்புக்கில் மனம் நொந்து தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெள்ளை உடை அணிந்து தான் வர வேண்டும்
அழைப்பிதழைப் பெற்ற ஒருவர், “நான் ஒரு கொடூரமான அழைப்பைப் பார்த்தேன். 2025ல் திருமணம் நடைபெறுவதாகவும், இப்போதிலிருந்தே அழைப்பிதழ்கள் அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில், அவர்கள் தங்கள் திருமணத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே இப்படியான விசித்திர திட்டங்களை தீட்டியிருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. அவர்கள் விருந்தினர்களுக்கு ஒரு டிரெஸ் கோடை டிசைன் செய்திருக்கிறார்கள். விருந்தினர்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ஊதா அல்லது கருப்பு ஆடைகளுக்கு அனுமதி இல்லை.
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களை குழந்தை பராமரிப்பாளர்களிடம் விட்டு வாருங்கள் என்று தம்பதிகள் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தனர். ஏனெனில் அவர்களைக் கையாள எங்களிடம் எந்த ஏற்பாடும் இல்லை. ஏப்ரல் 2025-ல் நினைவூட்டல் அனுப்புவோம் என்ற நிபந்தனையும் இருந்தது. நீங்கள் இன்னமும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொள்ள விரும்பினால், உட்கார ஒரு நாற்காலியையும் சாப்பிட ஒரு சாண்ட்விச்சையும் கொண்டு வாருங்கள். விழாவில் மது வழங்கப்படாது அல்லது குடிக்க அனுமதிக்கப்படாது” என்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைதள வாசிகள் இந்த அழைப்பை வெகுவாக விமர்சித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.