ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நமக்கு சவால் விடுவதோடு, நமது கண்களுக்கும மூளைக்கும் சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது பலருக்கும் சவாலாக இருக்கும். ஆனால் நீங்கள் எவ்வளவு முயற்சிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து தான் உங்களின் அறிவாற்றல் திறனைச் சோதிக்க முடியும். இதுப்போன்ற ஒரு ஓளியியல் மாயைப் புகைப்படம் ஒன்று தான் இணையத்தில் பகிரப்பட்டதோடு, நெட்டிசன்களிடம் வைரலாகியுள்ளது.
278க்குள் மறைந்திருக்கும் 218 என்ற எண்: தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்றைத் தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலில் நம்முடைய பார்வைக்கு 278 என்ற எண்கள் தான் வரிசையாக உள்ளது. இதனுள் தான் நாம் கண்டுபிடிக்க வேண்டிய 218 என்ற எண் ஒன்று மட்டும் உள்ளது. இதை நீங்கள் 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் நமக்கு சவால்.
கேட்பதற்கு சுலபமாக இருப்பது போன்று நமக்கு தெரிந்தாலும், ஒன்று மற்றும் ஏழு எண்கள் தன்னுடைய தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் நமக்கு சவாலாக அமையும். எனவே நீங்கள் இதனுள் உள்ள எண்கள் அனைத்தையும் விரைவாகவும், கவனமாகவும் ஸ்கேன் செய்ய வேண்டும். இதை நீங்கள் எவ்வளவு வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் உங்களின் ஆளுமை உள்ளது.
இந்த புதிரை நீங்கள் 10 வினாடிகளுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்கள் தான் ஜீனியஸ். கண்டுபிடிப்புகள் நபருக்கு நபர் மாறுபடலாம், ஆனால் அவற்றில் சில ஒருவரின் ஆளுமைப் பண்புகள் மற்றும் அவர் அல்லது அவள் வாழ்க்கையில் விஷயங்களை உணரும் விதம் பற்றிய சிறந்த விவரங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த புதிர் விளையாட்டை கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? இப்பவே ஸ்டார்ட் பண்ணிடுங்கள்.. குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான பதில்.
பதில் : உங்களுக்கு முன்னால் இருக்கும் புகைப்படத்தை நன்கு உற்றுநோக்குங்கள். இந்த புகைப்படத்தில் கீழிலிருந்து இரண்டாவது வரிசையில், இடது புறத்திலிருந்து 9 வது 218 என்ற எண் இடம் பெற்றுள்ளது.
இப்பொழுதாவது கண்டுபிடித்திருப்பீர்கள்? என நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட 10 வினாடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால், உங்களின் ஆளுமைத் திறன் மற்றும் ஐக்யூ அளவு சிறப்பாக உள்ளது என அர்த்தம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral