முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கொள்ளையர்களிடம் காதலியை தவிக்கவிட்டு ஓடிய காதலன்.. வைரலாகும் வீடியோ..

கொள்ளையர்களிடம் காதலியை தவிக்கவிட்டு ஓடிய காதலன்.. வைரலாகும் வீடியோ..

பதிவான சிசிடிவி காட்சி

பதிவான சிசிடிவி காட்சி

திருடர்கள் அந்த பெண்ணிடம் இருந்த ஹேண்ட்பேக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தங்கள் பைக்கில் ஏறி செல்கிறார்கள். அந்த பெண், ஓடிசென்ற வாலிபரை பார்த்து அழுகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலர்களின் பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகும். சில காதலர்களின் சிரிப்பான வீடியோக்களாக இருக்கும். சில வீடியோக்கள் காதலர்களின் குறும்புகளால் நிறைந்து இருக்கும்.

அப்படி தான் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காதலர்கள் இருவர் சாலையில் நடந்து செல்கிறார்கள். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் காதலர்களை மறித்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுகின்றனர். காதலி செய்வது அறியாமல் திகைத்து நிற்க உடன் வந்த காதலனோ விட்டா போதும்டா சாமி என காதலியை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தார்.

இதையும் படிக்க : Video: நானும் ரைடர் தான்... நேபாள ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ

திருடர்கள் அந்த பெண்ணிடம் இருந்த ஹேண்ட்பேக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தங்கள் பைக்கில் ஏறி செல்கிறார்கள். அந்த பெண்ணோ கொள்ளையர்களிடம் பணத்தை பறிக்கொடுத்த விரக்தியில் இப்படி தவிக்க விட்டு ஓடிய காதலனை நினைத்தும் கண்ணீர் வடிப்பது, அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

top videos

    இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியதையடுத்து பலரும் இந்த வீடியோ குறித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதில் ஆண் அந்த பெண்ணை காப்பாற்றாமல் பயந்து ஓடிவிட்டதாக பலர் அந்த ஆணை விமர்சித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அந்த ஆண் செய்தது சரியே எனவும் வாதம் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சமூகவலைதளங்கள் பார்த்துள்ளனர்.

    First published:

    Tags: CCTV, Tamil News, Viral News, Viral Video