உலகில் மிகவும் விசித்திரமான கதைகள் நிறைய இருக்கின்றன. சில சமயங்களில் அவற்றை கேட்டு நாம் திகைத்துப் போவோம்.
பொதுவாகவே மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவு அரிதாகவே நன்றாக இருக்கும். அத்தகைய மாமியார் மற்றும் மருமகள் இடையே, மாமியார் தனது பேத்தியின் பிறப்பை சந்தேகித்தது, அவருக்கே ஷாக் கொடுத்துள்ளது.
ஒரு பெண் தனது Reddit கணக்கின் மூலம் இந்த சம்பவத்தை வெளியில் கொண்டு வந்ததாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பச்சைக் கண்கள் கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். வீட்டில் யாருக்கும் பச்சைக் கண்கள் இல்லை, எனவே குழந்தை தனது மகனுடையது அல்ல என்று அவரது மாமியார் சந்தேகித்துள்ளார். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது குழந்தையை பரிசோதிக்க ஒப்புக்கொண்டார். டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது, குழந்தை அந்தப் பெண்ணில் கணவருக்குப் பிறந்தது உறுதியானது. ஆனால் அவளது மாமியார் பற்றிய பழைய ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது.
டிஎன்ஏ சோதனை அறிக்கையில், அந்த குழந்தை பெண்ணின் கணவருக்கு பிறந்தவள். ஆனால் அந்த கணவர் தனது தாயின் முறையற்ற குழந்தை என்று கண்டறியப்பட்டது. 29 வருடங்களாக தன் தந்தையாகக் கருதி வந்தவர் உயிரியல் தந்தையல்ல, தாயின் பழைய உறவில் பிறந்தவர் தான் அந்த கணவர் என்ற ரகசியம் வெளியே தெரிந்துள்ளது. இதனால் மாமியார் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.