கடந்த 2022 ஆம் ஆண்டின் முக்கிய பேசு பொருளாக இருந்த ஒன்றுதான் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவானது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் தற்போது வரை அதைப்பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட நாம் என்ன கேள்வி கேட்டாலும் அதனை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைக்கப்பட்டுள்ள இந்த சாட்ஜிபிடி பலரது விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறது. ஏனெனில் பலரும் இதனை தவறான வழியில் பயன்படுத்தக்கூடும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது. கிட்டத்தட்ட அதை நிரூபிப்பது போல மாணவன் ஒருவன் தன்னுடைய வீட்டு பாடத்தை இந்த சாட் ஜிபிடியை கொண்டு எழுதி ஆசிரியரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் பற்றிய ஒரு கட்டுரையை எழுதுமாறு அவனது ஆசிரியர் அந்த மாணவனிடம் கூறியுள்ளார். உடனடியாக சாட் ஜிபிடி-யின் உதவியை கொண்டு அதனிடம் கேள்வியை கேட்டு அதனை அப்படியே பதிலாக கொடுத்துள்ளார் அந்த மாணவன். இங்குதான் பெரிய சிக்கலே நிகழ்ந்துள்ளது.
Read More :அந்த இரவின் நீளம் 30 ஆண்டுகள்..! மெக்டொனால்ட்ஸ் “ரே க்ரோக்கின்” வெற்றிக் கதை..!
சில சமயங்களில் சாட்ஜிபிடி-யானது சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, “நான் ஒரு செயற்கை நுண்ணறிவு என்னால் 100% நீங்கள் கேட்பதை செய்ய முடியுமா தெரியவில்லை” என்பது போன்ற வாக்கியங்களுடன் சில பதில்களை இணைக்கும். இந்த மாணவனுக்கும் செயற்கை நுண்ணறிவானது அதுபோல பதிலே அளித்துள்ளது. அதில் “என்னை மன்னிக்கவும். நான் ஒரு செயற்கை நுண்ணறிவு, ஆகையால் என்னால் இந்த வீட்டு பாடத்தை முழுமையாக செய்ய முடியாது. ஆனால் இதை செய்வதற்கு உங்களுக்கு சில வழிமுறைகளை என்னால் வழங்க முடியும்” என்று அந்த பதிலை செயற்கை நுண்ணறிவு துவங்கியுள்ளது.
Teachers: "AI is a disaster, how am I going to know who is cheating?!"
Students: pic.twitter.com/RXGLt4FYKA
— Justine Moore (@venturetwins) April 18, 2023
அந்த மாணவனும் மேற்கண்ட இந்த வாக்கியத்தையும் தன்னுடைய வீட்டுப்பாடத்தில் இணைத்து ஆசிரியரிடம் சமர்ப்பித்துள்ளான். தற்போது அந்த மாணவனின் பதிலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
“இனிவரும் காலங்களில் ஆசிரியர்களால் மிக எளிதில் உண்மைக்கும் மோசடிக்கும் வித்தியாசத்தை கண்டறிய முடியாது. ஏனெனில் இந்த செயற்கை நுண்ணறிவானது காலப்போக்கில் இன்னும் முன்னேறி வருகிறது. என்று ஒருவர் தனது கருத்தை அது பதிவு செய்துள்ளார். மேலும் “இனிவரும் காலங்களில் மாணவர்கள் அனைத்துவித தேர்வுகளையும் ஆசிரியரின் கண்காணிப்பில் வகுப்பறையில் எந்தவித தொழில்நுட்பங்களும் இல்லாமல், வெறும் பேனாவையும் பேப்பரை வைத்து மட்டுமே எழுதுமாறு செய்ய வேண்டும்” என்று ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.