கோடைக்காலத்தில் வறட்சி அடையும் நம் நாவுக்கு நீர்ச்சத்து கொடுக்கும் விதமாக வெவ்வேறு விதமான உணவுகள், பானங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில், இனிப்புச் சுவையுடன், ஜில்லென்று கரையும் குல்ஃபியை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. குல்ஃபியின் ஒவ்வொரு பிளேவரும் ஒவ்வொரு சுவையைத் தரும். பிஸ்தா குல்ஃபி, பாதாம் குல்ஃபி, மேங்கோ குல்ஃபி என்று அதன் பட்டியல் நீளமானது. மாநகர வீதிகளில் நள்ளிரவு நேரத்திலும் கூட குல்ஃபி வண்டிகள் வலம் வந்து கொண்டிருக்கும்.
பல பேரின் விருப்ப உணவாக இருக்கும் குல்ஃபி-யை ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளுடன் வியாபாரி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அது மட்டுமா, அவரிடம் ‘தங்க குல்ஃபி’ கூட கிடைக்கிறது. தங்கத்தில் எப்படி குல்ஃபி கிடைக்கும், அதை எப்படிச் சாப்பிட முடியும் என்று நினைக்காதீர்கள். இவர் கையோடு கொண்டு வரும் 24 காரட் தங்க இழை பேப்பரில் சுற்றித்தான் குல்ஃபியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார். இந்த தங்க குல்ஃபியை ரூ.351க்கு விற்பனை செய்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் அருகேயுள்ள சராஃபா என்னும் இடத்தில் தான் இந்த வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடையின் பெயர் பிரகாஷ் குல்ஃபி ஆகும். அவரது குல்ஃபி வியாபாரம் குறித்து கைலாஷ் சோனி என்ற உணவு ரிவியூவர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரல் ஆகத் தொடங்கிய நிலையில், எண்ணற்ற பதிவாளர்கள் அதில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “குல்ஃபி வியாபாரிக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் கொடுக்கும் ரூ.351-ஐ சேமித்து வைத்தீர்கள் என்றால் ஒரு கட்டத்தில் கொஞ்சமாவது தங்கமே வாங்கி விடலாம்’’ என்று கூறியுள்ளார்.
Also Read : “ஆண்கள் இருந்தால் தான் உலகம் அழகாக இருக்கும்..” - கணவருக்கு காதல் பதிவு எழுதிய மனைவி...!
மற்றொரு பதிவாளரின் கமெண்டில், “ப்ரோ, இது போலியானது. தங்க மாதிரி மட்டும் தான். இதில் அரை காரட் அளவுகூட தங்கம் கிடையாது. பிறகு 24 காரட் எப்படி வரும்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, பயனாளர்கள் பலரும் இதைக் கிண்டல், கேலி செய்து பதிவிட்டுள்ளனர் என்றாலும் கூட, நிஜத்தில் குல்ஃபி வியாபாரியின் வியாபாரம் அபாரமாக நடைபெறுவதாகவே தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Viral Video