முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Video: அந்த மனசுதான் கடவுள்.. குழந்தையுடன் மழையில் சென்ற பெண்.. குடை தந்த நபர்.. வைரல் வீடியோ!

Video: அந்த மனசுதான் கடவுள்.. குழந்தையுடன் மழையில் சென்ற பெண்.. குடை தந்த நபர்.. வைரல் வீடியோ!

வைரலாகும் வீடியோ..!

வைரலாகும் வீடியோ..!

சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவானது தற்போது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வருகிறது. மேலும் அந்த நபரின் பெருந்தன்மையான செயலுக்கு சமூக வலைத்தளவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் போட்டி பொறாமை மிகுந்த உலகில் அனைவரும் தங்களது குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சில மனித நேய செயல்கள் வெளிப்பட்டு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. தற்போது சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் இது போன்ற வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி மிக பெரும் அளவில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சாலையில் சென்ற ஒருவர், குழந்தையுடன் மழையில் நனைந்து கொண்டே சென்ற ஒரு பெண்ணிற்கு தனது குடையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி தானமாக அளித்த சிசிடிவி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த வைரல் வீடியோவானது இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் சில நபர்கள் மழையில் நனைந்து கொண்டே பரபரப்பான ஒரு தெருவில் நடந்து செல்கின்றனர். அங்கே ஒரு பெண்மணி மழையில் நனைந்து கொண்டே தனது குழந்தையையும் கையில் வைத்துக்கொண்டு வேகவேகமாக தெரு வழியே நடந்து செல்கிறார். அந்த வழியாக இப்பெண்மணியின் எதிரே வந்த ஒரு நபர் இந்த பெண்ணை பார்த்து தன்னுடைய குடையை இவருக்கு கொடுக்கிறார்.

Read More : டாலர் நோட்டின் சைஸில் இரண்டு வயது நாய்..! வைரலாகும் வீடியோ..நம்ப முடிகிறதா..?

இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த பின் சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்து, பிறகு அவர் கொடுத்த அந்த குடையை வாங்கிக் கொள்கிறார். மேலும் அவரது இந்த பெருந்தன்மையான உதவிக்காக அந்த பெண் தலை வணங்கி நன்றி சொல்வதும், பதிலுக்கு அந்த நபரும் அந்த பெண்ணை ஆறுதலாக வழி அனுப்புவதும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. பெண்ணிற்கு குடையை அளித்து விட்டு அந்நபர் மழையில் நனைந்து கொண்டு செல்கிறார்.


top videos

    சில நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவானது தற்போது மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வருகிறது. மேலும் அந்த நபரின் பெருந்தன்மையான செயலுக்கு சமூக வலைத்தளவாசிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் கமெண்ட் பகுதி முழுவதும் அந்த நபரை பாராட்டி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Trending Video, Viral