முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'நாப்கின் விளம்பரம்.. மாடலிங் வாழ்க்கை'.. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரம் குறித்து பேசிய ஸ்மிரிதி இரானி!

'நாப்கின் விளம்பரம்.. மாடலிங் வாழ்க்கை'.. 25 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பரம் குறித்து பேசிய ஸ்மிரிதி இரானி!

ஸ்மிரிதி இரானி

ஸ்மிரிதி இரானி

மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பேசுவது ஏன் தடையாக இருக்க வேண்டும்” என்று வீடியோவைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார் ஸ்மிரிதி இரானி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவது 25 ஆண்டுகளுக்கு முன்பு கூச்சமாக கருதப்பட்டது. இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாப்கின் விளம்பரத்தின் மூலம் மாதவிடாய் தொடர்பான பொதுவான சமூக கருத்துக்களை உடைத்தார். மாதவிடாய் எப்படி இயற்கையானது என்பதைப் பற்றி அவர் அதில் பேசினார்.

25 வருட பழமையான கருப்பு-வெள்ளை கிளிப்பை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்ட இரானி, சானிட்டரி பேட் விளம்பரங்களில் நடிப்பது, "மாடலிங் கனவையே முடிவுக்கு கொண்டு வரவும் கூடும்" என்று குறிப்பிட்டார். இருப்பினும், ஒரு "பெரிய நிறுவனத்தின் விளம்பரத்திற்காக" கேமரா முன் பீரியட்ஸ் குறித்து பேசினார்.

வீடியோ கிளிப்பில், இரானி பீரியட்ஸ் பற்றி பேசுகிறார். மாதவிடாயை ஒரு "நோய்" என்று கருதும் கட்டுக்கதைகளை உடைத்து, "அந்த ஐந்து நாட்களும் எனக்கு மாதவிடாய் வருகிறது. அது நோய் அல்ல. எல்லாப் பெண்ணுக்கும் அது உண்டு. நான், என் அம்மா, நீங்கள், மற்ற மில்லியன் கணக்கான இந்திய பெண்கள் என அனைவருக்கும். இப்போது நமக்கு உதவக்கூடியது, விஸ்பர் சானிட்டரி பேடுகள். நீங்கள் புத்திசாலி, உங்கள் வாழ்க்கையை எல்லா விதத்திலும் கையாள முடியும். அப்படியென்றால் இந்த ஐந்து நாட்கள்? என்று கேட்டிருந்தார்.




 




View this post on Instagram





 

A post shared by Smriti Irani (@smritiiraniofficial)



”25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய நிறுவனத்திற்கான எனது முதல் விளம்பரம். இருப்பினும், தலைப்பு ஃபேன்சியாக இல்லை. ஒரு சானிட்டரி பேட் விளம்பரம், சம்பந்தப்பட்ட மாடலின் கனவையே முடிவுக்குக் கூட கொண்டு வரும். அதனால் பலர் இப்படியான விளம்பரங்களை புறக்கணித்தனர். கேமராவுக்கு முன்னால் என் வேலையைத் தொடங்க ஆவலுடன் நான் எஸ் சொன்னேன்! எல்லாவற்றிற்கும் மேலாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பேசுவது ஏன் தடையாக இருக்க வேண்டும்” என்று வீடியோவைப் பகிர்ந்து குறிப்பிட்டிருந்தார் ஸ்மிரிதி இரானி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sanitary Napkin, Smriti Irani