முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / புதிர் இதுதான்.. பதில் சொல்லுங்க பார்ப்போம்.. முதலீட்டு விகிதம் கண்டுபிடிக்கும் கேள்வி!

புதிர் இதுதான்.. பதில் சொல்லுங்க பார்ப்போம்.. முதலீட்டு விகிதம் கண்டுபிடிக்கும் கேள்வி!

கணக்கு புதிர்.

கணக்கு புதிர்.

கணக்கு என்பது கடினம் அல்ல. கொஞ்சம் நிதானமாக யோசித்து முயற்சித்தால் விடையைக் கண்டுபிடிக்கலாம்

  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] |

கணக்கு என்றால்  எல்லோருக்குமே ஒரு பயம் தான். அதை மாற்ற தான் எளிமையான கணக்குகள் கொண்டு உங்களை தயார்படுத்தி வருகிறோம். முக்கியமாக வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு  ஏற்றதாகவும் கொடுத்து வருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். 

இதற்கு முன்னர் ஓடையில் செல்லும் படகு, ரயில்கள் என்று பார்த்து வந்தோம். அதில் இருந்து மாறுபட்டு புதிய வகை கணக்கை இன்று பார்க்க இருக்கிறோம். ஆனால் எளிமையாக தினசரி நாம் பயன்படுத்தும் கான்செப்ட் வைத்து தான் இந்த கணக்குகள் அமைய இருக்கிறது. சரி கணக்கிற்கு போவோமா?

கேள்வி: மூன்று பங்குதாரர்கள் ஒரு வியாபாரத்தில் கிடைக்கும்  லாபத்தை 5 : 7 : 8 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அந்த தொழிலில் முறையே 14 மாதங்கள், 8 மாதங்கள் மற்றும் 7 மாதங்கள் பங்குதாரர்களாக இருந்தனர். அவர்களின் முதலீடுகளின் விகிதம் என்னவாக இருக்கும் என்று சொல்லுங்க பார்ப்போம் ?

லாப- நட்டக் கணக்கு எல்லாம் பள்ளிகளில் போட்டிருப்போம். அதே நினைவுகளை மீட்டு எடுத்து, இந்த கணக்கை போட முயற்சி செய்யுங்கள். அதுவும் இல்லாமல் இதில் பங்கீடு வேறு இருக்கிறது. அதையும் மனதில் கொண்டு யோசியுங்கள்.கணக்கின் லாஜிக் உங்களுக்கு புரிந்திருக்கும்.

லாஜிக்கை வைத்து , நீங்களே முயற்சி செய்து 1 விடையையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லை என்றாலும் இன்னும்  கொஞ்சம் நிதானமாக யோசித்து போடுங்கள். விடை கிடைத்துவிடும். சரி, இப்போது நீங்கள் கண்டுபிடித்த விடை சரியா என்று சரிபார்க்கும் நேரமிது.. பார்த்துவிடலாமா ...?

முதலில் இந்த கணக்கில் என்னென்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். லாப பங்கு கொடுத்துள்ளனர். முதலீடு என்ன என்பது தெரியாது. முதலீட்டின் பங்கீட்டை கண்டுபிடிக்க வேண்டும். இதை முதலில் மனதில் வைத்துக் கொள்வோம். இப்போது தெரியாத 3 முதலீட்டாளர்களின் முதலீட்டை x, y , z என்று வைத்துக்கொள்வோம்.

அடுத்து அவர்களின் முதலீடு காலம் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த முதலீடு, மற்றும் அதன் லாபம் என்பது அவர்கள் முதலீடு செய்யும் காலத்தைப் பொருத்தும் அமையும். எனவே முதலீட்டாளர்கள் தொடையை அவர்களது முதலீட்டு காலத்துடன் பெருக்கிக்கொள்வோம்.

முதல் முதலீட்டாளர் முதலீட்டுத் தொகை = 14x

இரண்டாம் முதலீட்டாளர் முதலீட்டுத் தொகை =8y

மூன்றாம் முதலீட்டாளர் முதலீட்டுத் தொகை = 7z

இப்போது முதலீட்டுத் தொகை மற்றும் லாப பங்கீடு நமக்குத் தெரியும்.

14x + 8y  +  7z  =  5 : 7 : 8

இதையும் முயற்சி செய்து பாருங்க: ஒரு தொழிலின் லாபப் பங்கு கொடுத்துள்ளோம். மொத்த லாபத்தை கண்டுபிடிங்க பார்ப்போம்!

இப்போது இதை வைத்து முதலீடு பங்கை கண்டுபிடிக்க என்ன செய்யலாம் என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இருக்கும் மதிப்புகளை வைத்து என்ன செய்யலாம்..?

இரண்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை ஒப்பிட்டு புது சமன்பாட்டை கொண்டுவர முயற்சி செய்வோமா?

14x / 8y = 5/7

குறுக்கு வெட்டில் உள்ள மதிப்புகளை பெருக்கினால்..

98x  = 40y

y= 49/20 x

இப்போது y க்கு x வைத்த ஒரு மதிப்பு கிடைத்துள்ளது. அதே போல, z க்கும் கண்டுபிடிப்போம்.

14x / 7z = 5/8

112x = 35 z

z = 112/35 x

z = 16/5 x

கண்டுபிடித்த மதிப்புகளை வைத்து முதலீட்டு விகிதத்தை கண்டுபிடிக்க முயல்வோம்.

x : y : z = x : 49/20 x: 16/5 x

இவற்றிற்கு மீச்சிறு பொது மடங்கு 20. அதை வைத்து எங்களை மாற்றினால்.

x : y : z = 20 : 49 : 64 என்பது கிடைக்கும்.

20 : 49 : 64  என்பது தான் சரியான விடை. உங்களுக்கும் இதே விடை வந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த விடை வரவில்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...

First published:

Tags: Trending