வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மக்களுக்கு ஏற்றதாக கணக்கு புதிர்களை பார்த்து வருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் சாதாரணமாக கணக்கு புதிர்களை போட முயற்சிக்கும் நபர்களுக்கும் ஏற்ற வண்ணம் கணக்குகளை தந்து வருகிறோம்.
இதற்கு முன்னர் ஓடையில் செல்லும் படகு, ரயில்கள் என்று பார்த்து வந்தோம். அதில் இருந்து மாறுபட்டு புதிய வகை கணக்கை இன்று பார்க்க இருக்கிறோம். ஆனால் எளிமையாக தினசரி நாம் பயன்படுத்தும் கான்செப்ட் வைத்து தான் இந்த கணக்குகள் அமைய இருக்கிறது. சரி கணக்கிற்கு போவோமா?
கேள்வி: A மற்றும் B என்ற இரண்டு நபர்கள் ஒரு தொழிலில் 3: 2 என்ற விகிதத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனத்திற்குச் கொடுத்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால். அதுபோக, A இன் பங்கு ரூ. 855, எனில் மொத்த லாபம் என்ன?
லாப- நட்டக் கணக்கு எல்லாம் பள்ளிகளில் போட்டிருப்போம். அதே நினைவுகளை மீட்டு எடுத்து, இந்த கணக்கை போட முயற்சி செய்யுங்கள். அதுவும் இல்லாமல் இதில் பங்கீடு வேறு இருக்கிறது. அதையும் மனதில் கொண்டு யோசியுங்கள்.கணக்கின் லாஜிக் உங்களுக்கு புரிந்திருக்கும் , நீங்க முயற்சி செய்து 1 விடையையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதை சரியா என்று சரிபார்க்கும் நேரமிது.. பார்த்துவிடலாமா ...?
அசல் என்னவென்று நமக்கு தெரியாது. சதவீத அளவு மட்டுமே தெரியும். எனவே அதை வைத்து கணக்கிற்கான விடையைக் கண்டுபிடிக்க முயல்வோம். கணக்கை முதலில் நன்றாக படித்துக்கொள்ளுங்கள்.
மொத்தம் லாபம் 100 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம். மொத்த லாபத்தில் 5% தொண்டு நிறுவனத்திற்குச் கொடுத்துவிடுகிறார்கள் என்று கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது,
எனவே நிறுவனத்திற்கு கொடுத்தபின்னர் கையில் இருக்கும் லாப சதவீதம் = 100 - 5 =95 %
அடுத்து முதலீடு பங்கீட்டை கவனத்தில் கொள்வோம். மொத்த தொடையில் 3 பங்கு A வும் 2 பங்கை B வும் முதலீடு செய்துள்ளனர்.
எனவே A இந்த பங்கு 3/5 , B இந்த பங்கு 2/5 என்று குறிப்பிடலாம். அதை கணக்கில் உள்ளிட்டால்,
A இல் லாபப் பங்கு = 95 * 3/5 = 57%
லாபத்தில் 57% A வைச் சேரும் என்று தெரிந்துவிட்டது. 57% லாபத் தொகை ரூ. 855 என்று கொடுத்துவிட்டனர். இதை வைத்து மொத்த லாபத்தைக் கணக்கிட வேண்டும்.
மொத்த லாபத்தில் 57 % 855 எனில் 100 % எவ்வளவு என்று தெரிய வேண்டும்
855 = 57/100 * X
X =855 * 100 / 57
X =1500
எனவே மொத்த லாபம் = ரூ.1500
ரூ.1500 என்பது தான் சரியான விடை. உங்களுக்கும் இதே விடை வந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த விடை வரவியில்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க.விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending