முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / புதிர் இதுதான்.. பதில் தெரியுமா? ரயில்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நேரம் என்னவா இருக்கும்?

புதிர் இதுதான்.. பதில் தெரியுமா? ரயில்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நேரம் என்னவா இருக்கும்?

ரயில் கணக்கு

ரயில் கணக்கு

புதிர்கள் லாஜிக் புரிந்து விட்டால் சட்டென்று முடிந்து விடும். கணக்கில் உள்ள லாஜிக்கை மட்டும் தேடுங்கள்.. கணக்கு தானாக தீரும்..

  • Last Updated :
  • chennai |

வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மக்களுக்கு ஏற்றதாக கணக்கு புதிர்களை பார்த்து வருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் சாதாரணமாக கணக்கு புதிர்களை போட முயற்சிக்கும் நபர்களுக்கும் ஏற்ற வண்ணம் கணக்குகளை தந்து வருகிறோம்.

எளிமையான கணக்கு முதல் கடினமானது வரை வரிசையாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் கொஞ்சம் கடினமான கணக்கு ஒன்றை பார்க்க இருக்கிறோம். பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதன் சாரம் புரிந்து விட்டால் எளிதாக போட்டு விடலாம். முயற்சி செய்யலாமா?

கேள்வி:  140 மீ மற்றும் 160 மீ நீளம் கொண்ட இரண்டு ரயில்கள் , 60 கிமீ/மணி மற்றும் 40 கிமீ/மணி வேகத்தில் எதிரெதிர் திசைகளில் இணையான பாதைகளில் இயக்கப்படுகின்றன. இந்த 2 ரயில்களும் ஒன்றை ஒன்று கடக்க எடுக்கும் நேரத்தை வினாடிகளில் சொல்லுங்க பார்ப்போம்.

பொதுவாக ரயில் கணக்கு என்றாலே ஒரே சூத்திரம். தான் வேகத்தில் சூத்திரத்தை வைத்து தான் எப்படியான ரயில் கணக்குகளையும் போட்டு வருகிறோம். அதே போலத்தான் இதுவும். கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தான் ஆங்காங்கே மாறும். மற்றபடி அடிநாதம் ஒன்று தான். கணக்கை புரிந்து கொள்ள முயலுங்கள்.

எதிர் எதிராக வரும்  இரண்டு ரயில்கள். வேகம், தூரம், நேரம். இதில் எவையெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன, விடுபட்டுள்ளன என்று பார்த்தால், கண்டுபிடிக்க வேண்டியது எளிதில் கிடைத்து விடும்.

சரி.. கணக்கின் லாஜிக் உங்களுக்கு புரிந்திருக்கும் , நீங்க முயற்சி செய்து 1 விடையையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதை சரியா என்று சரிபார்க்கும் நேரமிது.. பார்த்துவிடலாமா ...?

இரண்டு ரயில்களின் நீளம் நமக்குத்  தெரியும்.

முதல் ரயிலின் நீளம் =140 மீட்டர்

இரண்டாவது ரயிலின் நீளம் = 160 மீட்டர்

ரயில்கள் ஒன்றை ஒன்று கடக்கிறது என்றால் 2 ரயில்களும் தொடக்கம் முதல் ரயில் முடிவு வரை ஒன்றை ஒன்று கடப்பதாகும். எனில் மொத்த தூரம் என்பது 2 ரயில்களின் மொத்த நெலத்தைக் குறிக்கும்

கடக்கும் மொத்த தூரம் = 140 + 160 = 300 மீட்டர்கள்

ரயிலின் வேகங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன கிலோமீட்டர்/ மணி என்ற அளவில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ரயிலின் நீளம் என்பது மீட்டர் அளவில் இருக்கிறது. மேலும் நேரத்தையும் வினாடிகளில் கொடுத்துள்ளனர். எனவே வேகத்தை மீ/வி க்கு மாற்ற வேண்டும். அதற்கு கொடுக்கப்பட்டுள்ள வேகத்தை 5/18 ஆல் பெருக்க வேண்டும்.

முதல் ரயிலின் வேகம் =  60 கிமீ/மணி = 60 * 5 /18 = 100/6

இரண்டாம் ரயிலின் வேகம் =  40 கிமீ/மணி  = 40 * 5 / 18 = 100/9

இதையும் முயற்சி செய்து பாருங்க : கடக்கும் ரயில்களின் நீளத்தை கண்டுபிடிக்கும் வழி உங்களுக்குத் தெரியுமா?

எதிர் எதிராக வரும் ரயில் என்பதால் இந்த ரயில்களின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

ஒப்பீட்டு வேகம்  = 100/6 +100/9 = 250/9 மீ/நொடி

இப்போது தூரமும் , வேகமும் கிடைத்துவிட்டது. இது வைத்து நேரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

வேகம் = தூரம் / நேரம்

250/9 = 300 / நேரம்

நேரம் = 300 * 9 / 250

நேரம் = 54/5 = 10.8 வினாடிகள்

top videos

    எனவே எதிர் எதிராக வரும் 2 ரயில்களும் ஒன்றை ஒன்று கடக்க ஆகும் நேரம் என்பது 10.8 வினாடிகள். உங்களுக்கும் இதே விடை வந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த விடை வரவியில்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க. முயற்சி திருவினையாக்கும்.

    First published: