வணக்கம் மக்களே. தினம் ஒரு கணக்கு புதிரைப் பார்த்து வருகிறோம். வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மக்களுக்கு ஏற்றதாக பார்த்து எடுத்து தருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் சாதாரணமாக கணக்கு புதிர்களை போட முயற்சிக்கும் நபர்களுக்கும் ஏற்ற வண்ணம் கணக்குகளை தந்து வருகிறோம்.
எளிமையான கணக்கு முதல் கடினமானது வரை வரிசையாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் கொஞ்சம் கடினமான கணக்கு ஒன்றை பார்க்க இருக்கிறோம். பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதன் சாரம் புரிந்து விட்டால் எளிதாக போட்டு விடலாம். முயற்சி செய்யலாமா?
கேள்வி: ஒரு சரக்கு ரயில் 72 கிமீ வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. ரயில் 250 மீ நீளமுள்ள நடைமேடையை 26 வினாடிகளில் கடக்கிறது என்றால் சரக்கு ரயிலின் நீளம் என்ன?
பொதுவாக ரயில் கணக்கு என்றாலே ஒரே சூத்திரம். தான் வேகத்தில் சூத்திரத்தை வைத்து தான் எப்படியான ரயில் கணக்குகளையும் போட்டு வருகிறோம். அதே போலத்தான் இதுவும். கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தான் ஆங்காங்கே மாறும். மற்றபடி அடிநாதம் ஒன்று தான். கணக்கை புரிந்து கொள்ள முயலுங்கள்.
என்னென்ன விபரங்கள் நம்மிடம் இருக்கிறது என்பதை வைத்து அதே சூத்திரத்தில் உள்ளிட்டு தெரியாத அளவை கண்டுபிடிக்க பாருங்கள். நீளம் என்பதை இவற்றை வைத்து எல்லாம் கணக்கிடுவோம் என்று சிந்தியுங்கள்.
பொதுவாக ரயில் கணக்கு என்றாலே ஒரே சூத்திரம். தான் வேகத்தில் சூத்திரத்தை வைத்து தான் எப்படியான ரயில் கணக்குகளையும் போட்டு வருகிறோம். அதே போலத்தான் இதுவும். கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தான் ஆங்காங்கே மாறும். மற்றபடி அடிநாதம் ஒன்று தான். கணக்கை புரிந்து கொள்ள முயலுங்கள்.
ரயிலின் வேகம் = 72 கிமீ/மணி
நடைமேடையில் நீளம் = 250 மீ
நடைமேடையை ரயில் கடக்க ஆகும் நேரம் = 26 வினாடிகள்
இந்த தகவல்களை பார்த்ததும் ஒரு கண்ணில் பட்டிருக்கும். நடைமேடை நீளம், கடக்கும் நேரம் மீட்டர், மற்றும் வினாடிகள் கணக்கில் இருக்கின்றன. ரயிலின் வேகம் மட்டும் கிமீ.மணி என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதை மீ/ நொடிக்கு மாற்ற வேண்டும்.
கிமீ/மணி என்ற அளவை மீ/வி க்கு மாற்ற வேண்டும். அதற்கு கிடைத்த ஒப்பீட்டு வேகத்தை 5/18 ஆல் பெருக்க வேண்டும்.
ரயிலின் வேகம் = 72 *5 /18 = 20 மீ/வினாடி
மொத்தமாக கடக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுல நடைமேடையில் நீளம் நமக்கு தெரியும் ரயிலின் நீளம் தெரியாது. தெரியாததை x என்று வைத்துக்கொள்வோம். இப்பொது வேகத்தின் சூத்திரத்தில் உள்ளிடுவோம்
20 மீ/வினாடி = 250+x மீட்டர் / 26 வினாடிகள்
20*26 =250 + x
250 + x = 520
x = 520 - 250
x = 270
எனவே சரக்கு ரயிலின் நீளம் என்பது 270 மீட்டர்கள் என்று கண்டுபிடித்துவிட்டோம். உங்களுக்கும் இதே விடை வந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த விடை வரவியில்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க. முயற்சி திருவினையாக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending