முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஓடும் மனிதரை ரயில் கடக்க ஆகும் நேரத்தைக் கண்டுபிடித்து காட்டுங்க பார்ப்போம்!

ஓடும் மனிதரை ரயில் கடக்க ஆகும் நேரத்தைக் கண்டுபிடித்து காட்டுங்க பார்ப்போம்!

ரயில் கணக்கு

ரயில் கணக்கு

புதிர்கள் லாஜிக் புரிந்து விட்டால் சட்டென்று முடிந்து விடும். கணக்கில் உள்ள லாஜிக்கை மட்டும் தேடுங்கள்.. கணக்கு தானாக தீரும்..

  • Last Updated :
  • Chennai, India

தினம் ஒரு கணக்கு புதிரை பார்த்து வருகிறோம். வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மக்களுக்கு ஏற்றதாக பார்த்து எடுத்து தருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் சாதாரணமாக கணக்கு புதிர்களை போட முயற்சிக்கும் நபர்களுக்கும் ஏற்ற வண்ணம் கணக்குகளை தந்து வருகிறோம்.

எளிமையான கணக்கு முதல் கடினமானது வரை வரிசையாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் கொஞ்சம் கடினமான கணக்கு ஒன்றை பார்க்க இருக்கிறோம். பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அதன் சாரம் புரிந்து விட்டால் எளிதாக போட்டு விடலாம். முயற்சி செய்யலாமா?

120 மீட்டர் நீளமுள்ள ரயில் ஒன்று  மணிக்கு 45 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் எஞ்சினுக்கு முன்னாள்,  240 மீட்டர் தூரத்தில் ரயில் செல்லும் அதே தொடையில் 9 கிமீ வேகத்தில் ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கிறார். இப்படியே போகும்போது, ரயில் எவ்வளவு நேரத்தில் ஓடுபவரை கடந்து செல்லும்?

பொதுவாக ரயில் கணக்கு என்றாலே ஒரே சூத்திரம். தான் வேகத்தில் சூத்திரத்தை வைத்து தான் எப்படியான ரயில் கணக்குகளையும் போட்டு வருகிறோம். அதே போலத்தான் இதுவும். கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் தான் ஆங்காங்கே மாறும். மற்றபடி அடிநாதம் ஒன்று தான். கணக்கை ம்=புரிந்து கொள்ள முயலுங்கள்.

ரயிலும் மனிதரும் ஒரே திசையில் தான் செல்கிறார்கள். தூரம் மட்டும் தான் வித்தியாசம், வேகத்தில் கொஞ்சம் கணக்கு. கடக்கும் நேரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கொஞ்சம் பொறுமையாக இத்தகு முன்னர் போட்ட கணக்குகளை சிந்தித்து பாருங்க.. விடை கிடைத்து விடும்.

சரி.. கணக்கின் லாஜிக் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். நீங்க; முயற்சி செய்து 1 விடையையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதை சரியா என்று சரிபார்க்கும் நேரமிது.. பார்த்துவிடலாமா ...?

வேகத்தை பொறுத்தவரை ரயிலும் மனிதரும் ஒரே திசையில் செல்கிறார்கள். ஒரே திசையில் உள்ள வேகம் என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றைக் கழிக்க வேண்டும்.

ஓடும் ரயிலின் வேகம் = 45 கிமீ/மணி

ஓடும் மனிதரின் வேகம் = 9 கிமீ/மணி

ஒப்பீட்டு வேகம் = (45 - 9) = 36 கிமீ/மணி

ரயில்களின் வேகம் கிமீ இல் இருக்கலாம், ஆனால் ரயிலின் நீளம், மனிதருக்கும் ரயிலுக்கும் இருக்கும் தூரம் என்பது மீட்டர் அளவில்  இருக்கிறது. எனவே கிமீ/மணி என்ற அளவை மீ/வி க்கு மாற்ற வேண்டும். அதற்கு கிடைத்த ஒப்பீட்டு வேகத்தை 5/18 ஆல் பெருக்க வேண்டும்.

ஒப்பீட்டு வேகம் = = 36 *5/18 மீ/நொடி = 10 மீ/நொடி

வேகம் கிடைத்துவிட்டது. அடுத்து தூரத்திற்கு வருவோம்.

ரயிலின் நீளம் = 120 மீட்டர்

ரயிலுக்கு மனிதருக்கும் உள்ள தூரம் =  240 மீட்டர்

ரயில் மனிதரை அடைந்து, அவரை முழுக்க கடக்க ஆகும் தூரம் =  120 +240 = 360 மீட்டர்

இதையும் முயற்சி செய்து பாருங்க : ஒரே திசையில் ஒன்றை ஒன்று முந்திச்சென்ற ரயிலின் நீளம் என்னவாக இருக்கும்? கண்டுபிடிங்க பார்ப்போம்u

இப்போது நமக்கு எப்போதும் தெரிந்து வேகத்தின் சூத்திரத்துக்கு வருவோம்,

வேகம் = தூரம் / நேரம்

இதில் தெரிந்து தரவுகளை உள்ளிடுவோம்,

10 மீ/நொடி = 360 மீட்டர் / நேரம்

நேரம் = 360 / 10

நேரம் = 36 நொடி

எனவே ஒரே திசையில் ஓடும் மனிதனை ஓடும் ரயில் கடப்பதற்கு 36 நொடிகள் ஆகும் என்பது தான் சரியான விடை. உங்களுக்கு இந்த விடை வரவியில்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க. முயற்சி திருவினையாக்கும். வேறு புதிய எண்களை வைத்து நீங்களே ஒரு கணக்கை உருவாக்கி போட்டு பாருங்க.

First published:

Tags: Competitive Exams, Train, Trending