முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math problems | கம்பத்தை கடக்கும் ரயில் வேகம் தெரிந்தால், நீளத்தைக் கண்டுபிடிக்கலாமா?

Math problems | கம்பத்தை கடக்கும் ரயில் வேகம் தெரிந்தால், நீளத்தைக் கண்டுபிடிக்கலாமா?

கணக்கு

கணக்கு

ரயில் - தூர - நேர -நீள கணக்குகள் எல்லாமே பொதுவாக வேகத்தின் சூத்திரத்தை வைத்து தான் அமைக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai |

வணக்கம் மக்களே. தினம் ஒரு கணக்கு புதிரை பார்த்து வருகிறோம். வங்கி தேர்வுகள், போட்டித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் மக்களுக்கு ஏற்றதாக பார்த்து எடுத்து தருகிறோம். புதிதாக தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் சாதாரணமாக கணக்கு புதிர்களை போடா முயற்சிக்கும் நபர்களுக்கும் ஏற்ற வண்ணம் கணக்குகளை தந்து வருகிறோம்.

புதிய மாதம் , புதிய வாரம், என்பதால் புதிய கான்செப்ட்டோடு இந்த மாதத்தைத் தொடங்கலாம். சென்ற வாரம் ஓடை- படகு கணக்குகளை போட்டு வந்தோம். இந்த முறை ரயில் சார்ந்த  கணக்குகளை போட இருக்கிறோம். எளிமையான கணக்குகளில் இருந்தே தொடங்குவோம்.

மணிக்கு 60 கிமீ வேகத்தில் ஓடும் ரயில் 9 வினாடிகளில் ஒரு கம்பத்தை கடக்கிறது. ரயிலின் நீளம் என்ன?

இதுதான் கேள்வி. கேள்வி மிக எளிதாக இருக்கிறது தானே? விடையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் தானே? ரயிலை பொறுத்தவரை, ரயிலின் நீளம், ரயில் தண்டவாளத்தின் நீளம், ரயிலின் வேகம், கடக்கும் நேரம் - இவற்றை வைத்து தான் கணக்குகள் அமையும்.

ஒற்றை ரயில், இரட்டை ரயில் கடப்பது என்று பல வகைகள் இருக்கின்ற. இதில் அடிப்படையில் இருந்து ஒவ்வொரு கணக்காக போட்டு வரலாம். முடியும் போது இந்த வகையான கணக்கு இவ்வளவு தானா? என்று கேட்கும் அளவுக்கு எளிதாகிவிடும்.

சரி கணக்கிற்கு வருவோம்.  ரயிலின் வேகம், கம்பத்தை கடக்கும் நேரத்தை கொடுத்துவிட்டார்கள். ரயில் ஒரு கம்பத்தை தான் கடக்கிறது. கம்பத்தின் நீளம்  மீட்டர் கணக்கில் கிடையாது என்பதால் ரயிலின் நீளம் மட்டுமே கணக்கு. இப்போது அந்த நீளத்தை தான் கண்டுபிடிக்க வேண்டும். வேகத்தின் சூத்திரம் நினைவிருக்கிறது தானே விடையைக் கண்டுபிடிங்க..

சரி..விடையை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை இப்போது விடையை தெரிந்து கொள்ளலாம். அதன் பின் இதே மாதிரியான வேறு கணக்கை போட்டு அதை தீர்த்து பார்க்கலாம்.

ரயிலின் வேகம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முதலும் எடுத்துக்கொள்வோம். அதே போல கடக்கும் நேரத்தையும் கவனிப்போம். கடக்கும் நேரம்  9 வினாடிகள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகம் என்பது, 60 கிமீ/மணி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டையும் ஒரே அளவுக்கு கொண்டுவர வேண்டும்.

தூரத்தை கிலோமீட்டரில் இருந்து மீட்டராக மாற்ற இருக்கும் எண்ணுடன் 1000 ஐ பெருக்க வேண்டும். அதே போல, மணியை நொடியாக மாற்ற வேண்டும் எனில், மணிநேர கணக்கோடு  60(மணி -> நிமிடம் ) * 60 (நிமிடம் -> நொடி ) என்பதை பெருக்க வேண்டும்.  

அப்படி வேகத்தின் மதிப்பை மாற்றினால் = 60 * 1000 / 3600 = 50 / 3 மீட்டர்/ நொடி என்றைக்கும்.

கொடுக்கப்பட்டிருக்கும் ரயில் கடந்த நேரம்  = 9 நொடிகள்.

இதையும் பாருங்க : இணையத்தை குழப்பிய படகு கேள்வி.. கணக்கு புலியா நீங்க? அப்போ இதற்கு பதில் சொல்லுங்க.!

வேகம், நேரத்தை வைத்து தூரத்தை கண்டுபிடிக்கலாம் அல்லவா? இங்கு தூரம் என்பது ரயிலின் நீளத்தைக் குறிக்கும்.

வேகம் = தூரம் / நேரம்

தூரம் = வேகம் * நேரம்

தூரம் = (50/3 ) * 9 = 150 மீட்டர்.

எனவே கம்பத்தை 9 நொடிகளில் கடந்த ரயிலின் நீளம் என்பது 150 மீட்டர்.

top videos

    இது தான் சரியான விடை. உங்களுக்கும் இதே விடை தான் வந்திருக்கும் என்று நம்புகிறோம். இல்லை என்றாலும் இப்போது மீண்டும் முயற்சி செய்து பாருங்க. முயற்சி திருவினையாக்கும். வேறு புதிய எண்களை வைத்து நீங்களே ஒரு கணக்கை உருவாக்கி போட்டு பாருங்க.

    First published:

    Tags: Train, Trending