முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Logical reasoning | இந்தத் தனிவட்டி கணக்கின் அசல் தொகை என்னவாக இருக்கும் சொல்லுங்க?

Logical reasoning | இந்தத் தனிவட்டி கணக்கின் அசல் தொகை என்னவாக இருக்கும் சொல்லுங்க?

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

லாஜிக் புரிந்துவிட்டால் எல்லா கணக்கும் எளிமை தான்.

  • Last Updated :
  • Chennai |

மக்கள் தங்கள் சிந்தனை திறனை மேம்படுத்திக்கொள்ள நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி தான் புதிர்களை அவிழ்ப்பது. புதிர்களில் படப் புதிர், வார்த்தை விளையாட்டுகள், கணித புதிர்கள் என்று பல வகைகள் உண்டு. இதில் உள்ள அனைத்து புதிர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் லாஜிக். எந்த கஷ்டமான புதிராக இருந்தாலும் அதன் அடிப்படையில் ஒரே ஒரு லாஜிக் தான் ஒளிந்திருக்கும்.

அந்த லாஜிக் வைத்து புனையப்பட்டு தான் புதிர்கள் உருவாக்கப்படுகிறது. அந்த லாஜிக் என்னவென்று சிந்திக்கும் போது ஒரே நோக்கில் சிந்திக்காமல் பல்வேறு முறைகளில் சிந்திக்க பழகுவோம். அது தான் பரந்துபட்ட சிந்தனையை வளர்க்கும் வழியாக இருக்கும்.  ஒரு பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நிறைய தீர்வுக்கான வழிகள் இருக்கும். அதை யோசிக்க பழக இந்த கணக்குகள் ஒரு  பயிற்சியாக இருக்கும். உங்களுக்காக கணக்கு இதோ..

ஒரு தொகை தனி வட்டியில் ரூ. 3 ஆண்டுகளில் 815 மற்றும் ரூ. 4 ஆண்டுகளில் ரூ.854 என்று மாறுகிறது. எனில் அதன் அசல் எவ்வளவு?

பள்ளி  போடத்தொடங்கிய தான். தினசரி நாட்களில் நாம் கடந்து வரும் கடன் கணக்கு தான் என்பதால் பதில் கிடைப்பதில் சிரமம் இருக்காது என்று நம்புகிறோம். அசல், வட்டி, அதில் தனி வட்டி, கூட்டுவட்டி என்று படித்த பாடங்களை எல்லாம் மண்டைக்குள் ஒரு நிமிடம் ஓடவிட்டு பாருங்க நிச்சயம் பதிலை கண்டுபிடித்துவிடலாம்.

கணக்கில் மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டின் வட்டியுடன் கூடிய அசல் தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வட்டி தொகையை கணக்கிட்டால் மொத்த வட்டித் தொகையை கழித்துவிட்டு அசல் தொகையை எழுதிவிடலாம். நேரம் எடுத்து யோசித்து பாருங்க.

விடையை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை இப்போது விடையை தெரிந்து கொள்ளலாம். அதன் பின் இதே மாதிரியான வேறு கணக்கை  போட்டு அதை தீர்த்து பார்க்கலாம்.

தனிவட்டி கணக்கு தான் கொடுத்திருக்கிறார்கள். எனில் எல்லா ஆண்டுகளுக்கும் ஒரே அளவு வட்டி தான். அப்படி பார்த்தால் நான்காம் ஆண்டு மொத்த தொகையில் இருந்து மூன்றாம் ஆண்டு மொத்த தொகையை கழித்தால் 1 ஆண்டிற்கான வட்டி கிடைத்துவிடும் தானே?

நான்காவது ஆண்டு மொத்த தொகை = 854

மூன்றாவது  ஆண்டு மொத்த தொகை = 815

1 ஆண்டின் வட்டி = 854 - 815 = 39

இதுவே 3 ஆண்டுக்கு என்றால் = 39 * 3 = 117

3 ஆண்டுகளுக்கான வட்டி 117 எனில், மூன்றாவது  ஆண்டு மொத்த தொகையில் இருந்து வட்டியை கழித்தால் அசல் தொகை கிடைத்துவிடும் அல்லவா?

இதையும் முயற்சி செய்து பாருங்க: இந்த முதலீட்டின் மொத்த லாபம் எவ்வளவு இருக்கும் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்!

815 - 117 =  698.

எனில் இந்த கணக்கின் அசல் தொகை என்பது ரூ. 698.

top videos

    உங்களுக்கும் இந்த விடை தான் வந்திருக்கும் என்று நினைக்கிறோம். அப்படி இல்லை என்றாலும் இப்போது சரியான விடை மற்றும் அது எப்படி வந்தது என்ற லாஜிக் புரிந்திருக்கும்.  இது போன்ற வேறு கணக்குகளை முயற்சி செய்து பாருங்க. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. நாளை மற்றொரு கேள்வியோடு சந்திப்போம் மக்களே…

    First published:

    Tags: Interest, Trending