முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Logical reasoning | 5 குழந்தைகளில் இளைய குழந்தையின் வயது என்னவாக இருக்கும்? நீங்க கண்டுபிடிச்சுடீங்களா?

Logical reasoning | 5 குழந்தைகளில் இளைய குழந்தையின் வயது என்னவாக இருக்கும்? நீங்க கண்டுபிடிச்சுடீங்களா?

புதிர்

புதிர்

ரொம்ப சிரமப்படத் தேவை இல்ல... எளிமையான கணக்கு தான். நிதானமாக யோசித்தால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்

  • Last Updated :
  • Chennai |

பொழுதுபோக்காக செய்யும் சில செயல்கள் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் அதில் ஒரு வழி தான் புதிர்களை அவிழ்ப்பது. புதிர்களில் படப் புதிர், வார்த்தை விளையாட்டுகள், கணித புதிர்கள் என்று பல வகைகள் உண்டு. இதில் உள்ள அனைத்து புதிர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் லாஜிக். இந்த லாஜிக் கண்டுபிடிக்க யோசிக்கும்போது நமது மூளை  பல கோணங்களில் செயல்படத் தொடங்கும்.

நம் வாழ்க்கையில்  ஒரு பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நிறைய தீர்வுக்கான வழிகள் இருக்கும். அதில் எதை தேர்வு செய்தால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனை அல்லது மனக்கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்று சிந்தித்து செயல்படுத்த வேண்டி இருக்கும். அதை யோசிக்க பழக இந்த புதிர்கள் ஒரு  பயிற்சி களமாக  இருக்கும். 

இதுவரை எண்வரிசைகள், எழுதுக வரிசைகள் என்று பார்த்துக்கொண்டு இருந்தோம். புது வருடம் பிறந்து இருக்கிறது. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டாமா? புது ஆண்டு பிறக்கும் போது ஆண்டை எழுதுவதில் ஒரு எண் கூடும். வயது கூடும். அதனால் அந்த வயதை வைத்தே ஒரு புதிரை எடுத்து வந்துள்ளோம். 

3 வருட இடைவெளியில் பிறந்த 5 குழந்தைகளின் வயதுகளின் கூட்டுத்தொகை 50 ஆண்டுகள். இளைய குழந்தையின் வயது என்ன?

எண்புதிர்களை போன்றது தான் இது. என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்றால் இதில் கேள்வி கொஞ்சம் வார்த்தைகளாக இருக்கும். வார்த்தைகளை வைத்து கணக்கை உருவாக்கி அதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும். இதை உங்கள் நிஜ வாழ்க்கையில் இருக்கும் நபர்களை வைத்து கணக்கிடுவதாய் கற்பனை செய்து போடுங்கள் கணக்கு எளிதாகும்.

கேட்க எளிமையாகத் தான் இருக்கிறது ஆனால் எப்படி வந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டுமே என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. ஆனால் புதிர் என்றால் அப்படி தானே இருக்கும். நேரடியாக கேட்டுவிட்டால் அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது. கூட்டல், வகுத்தல், பெருக்கல் தான் வரும். வேறு பெரிய விஷயங்கள் எல்லாம் தேவை இல்லை. முயற்சி செய்யுங்கள்.

என்ன தேடி முடித்துவிட்டீர்களா? விடை கிடைத்து விட்டதா? குறைந்தபட்சம் லாஜிக்கை கண்டுபிடித்திருந்தால் கூட போதுமானது. சரி இப்போது நாங்கள் அதற்கான விடையை சொல்கிறோம் . விடை கிடைத்திருந்தால் சரி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தெரிந்து கொள்ளுங்கள் போதுமானது. நாளைய கணக்கிற்கு விடை தேடும் அறிவு கிடைத்தால் போதுமானது. 

சரி கணக்கிற்கு வருவோம். 5 குழந்தைகள். எல்லோரும் மூன்று வருட இடைவெளியில் பிறந்திருக்கிறார்கள். இதை முதலில் ஒரு கணக்கு வடிவமாக மாற்றுவோம்.

இளைய குழந்தை வயதை x என்று வைத்துக்கொள்வோம். 

அடுத்த குழந்தை 3 ஆண்டுகள் முன்னர் பிறந்திருக்கும். எனில்,அதன் வயது  x +3

மூன்றாவது குழந்தை அதற்கு  3 வருடங்கள் முன்னர் பிறந்திருக்கும் அப்போது அதன் வயது = x +3+3 =x +6

இதே தொடர்ந்தால்,

நான்காவது குழந்தை = x + 9

ஐந்தாவது குழந்தை  = x + 12

மீண்டும் கணக்கிற்கு வருவோம். இந்த 5 குழந்தைகளின் வயதின் கூட்டு 50 என்று வரவேண்டும்.

 x, (x + 3), (x + 6), (x + 9) மற்றும்  (x + 12) ஆகிய வயதுகளை கூட்டினால்,

x + (x + 3) + (x + 6) + (x + 9) + (x + 12) = 50

x + x + 3 + x + 6 + x + 9 + x + 12 = 50

இதையும் முயற்ச்சி செய்து பாருங்க : Math riddle | எண்களின் வரிசையில் மிஸ்ஸான எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்!

x  மற்றும் எண்களை கூட்டுவோம், 

x + x + x + x + x + 3+ 6 + 9 + 12 = 50

5x + 30 = 50

5x = 50 - 30

5x = 20

x = 20/5

 x = 4.

top videos

    எனில், இளைய குழந்தையின் வயது 4 என்பதே சரியானது. கணக்கில் புதிர் என்றதும் அதிகம் யோசிப்போம். ஆனால் புதிருக்கான உண்மையான விடை அடிப்படையில் இருக்கும். புதிர்கள் எல்லாம் போட போட வந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. நாளை மற்றொரு கணக்கோடு சந்திப்போம் மக்களே…

    First published:

    Tags: Competitive Exams, Trending