பொழுதுபோக்காக செய்யும் சில செயல்கள் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் அதில் ஒரு வழி தான் புதிர்களை அவிழ்ப்பது. புதிர்களில் படப் புதிர், வார்த்தை விளையாட்டுகள், கணித புதிர்கள் என்று பல வகைகள் உண்டு. இதில் உள்ள அனைத்து புதிர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் லாஜிக். இந்த லாஜிக் கண்டுபிடிக்க யோசிக்கும்போது நமது மூளை பல கோணங்களில் செயல்படத் தொடங்கும்.
நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நிறைய தீர்வுக்கான வழிகள் இருக்கும். அதில் எதை தேர்வு செய்தால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனை அல்லது மனக்கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்று சிந்தித்து செயல்படுத்த வேண்டி இருக்கும். அதை யோசிக்க பழக இந்த புதிர்கள் ஒரு பயிற்சி களமாக இருக்கும். உங்களுக்காக இன்று ஒரு லாஜிக் புதிர் கொண்டுவந்துள்ளோம்
38:121::16:?
இந்த கணக்கு புதிரே ஒரே ஒரு வரிதான். முதல் இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள தொடர்பை கண்டுபிடுத்து அதே அடிப்படையில் அமைந்துள்ள இரண்டாம் பாதியில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்க வேண்டும். பார்க்க மிக எளிதாக இருக்கும் இந்த கணக்கு , அரசு போட்டித் தேர்வுகள், வாங்கி தேர்வுகளில் கேட்கப்படும்.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு இது ஒரு பயிற்சிக் கணக்காக இருக்கும். அதோடு கணக்கு போடா சிரமப்படும் மக்கள் அதை எளிதாக கற்றுக்கொள்ளவும் இது உதவியாக இருக்கும். ஒரு வரி கணக்கு தானே. இதை போடா அவ்வளவு சிரமம் இருக்குமா என்ன?
சரி இந்த கணக்கு நமக்கு புதிது என்பதால் இதைப் போட ஒரு ஹிந்த் கூட தருகிறோம். முதல் எண்ணோடு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எதையும் செய்யவேண்டாம். அதன் எண்களுக்குள் தான் கணக்கு இருக்கிறது.முதல் நாள் என்பதால் தான் இவ்வளவு எளிமையான கணக்கை கொடுத்துள்ளோம்.
சரி இந்நேரம் லாஜிக்கை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. லாஜிக்கை தெரிந்துகொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்க. இந்தக் கணக்கின் லாஜிக் நங்கள் முன்னர் சொன்னது போல முதல் எண்ணில் உள்ள எழுத்துக்களை வைத்து போடப்பட்டது தான்.
38 எண்ணில் உள்ள இரண்டு தனிப்பட்ட எண்களைக் கூட்டுங்கள்.
3+8 = 11
இந்த எண்ணை இரட்டித்தால்,
11² =11 * 11 =121
முதல் பாதியில் உள்ள லாஜிக் புரிந்துவிட்டதா?
அதே போலத்தான் இரண்டாம் பாதிக்கும் போடவேண்டும்.
இதையும் முயற்சி செய்து பாருங்க: Math riddle| அரசு பணித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு ஏற்ற கணக்கு புதிர் இதோ!
இரண்டாம் பத்தியில் கொடுக்கப்பட்ட எண் 16.
இதில் தனிப்பட்ட எண்களைக் கூட்டுவோம்,
1+6 = 7
இப்போது இந்த எண்ணின் இரட்டை மடங்கை கண்டுபிடிப்போம்,
7² = 7 * 7 = 49
49 என்பது தான் சரியான விடை. உங்களுக்கும் அதே விடை தான் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். புதிர்கள் எல்லாம் போட போட வந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. நாளை மற்றொரு கணக்கோடு சந்திப்போம் மக்களே…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending