முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math riddle | இந்த வார்த்தை கணக்கை கற்பனை செய்து உங்களால் தீர்க்க முடியுமா?

Math riddle | இந்த வார்த்தை கணக்கை கற்பனை செய்து உங்களால் தீர்க்க முடியுமா?

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

கணக்கு லாஜிக் எல்லாம் நிறைய சிந்திக்க, போட்டு பார்க்க வந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.

  • Last Updated :
  • Chennai, India

மக்கள் தங்கள் சிந்தனை திறனை மேம்படுத்திக்கொள்ள நிறைய வழிகள் உள்ளன . அதில் ஒரு வழி தான் புதிர்களை அவிழ்ப்பது. புதிர்களில் படப் புதிர், வார்த்தை விளையாட்டுகள், கணித புதிர்கள் என்று பல வகைகள் உண்டு. இதில் உள்ள அனைத்து புதிர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் லாஜிக். எந்த கஷ்டமான புதிராக இருந்தாலும் அதன் அடிப்படையில் ஒரே ஒரு லாஜிக் தான் ஒளிந்திருக்கும்.

அந்த லாஜிக்கை வைத்து புனையப்பட்டு தான் புதிர்கள் உருவாக்கப்படுகிறது. அந்த லாஜிக்கை கண்டுபிடிக்க மேலோட்ட பார்வை போதாது. கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை நுட்பம் தேவைப்படும். சராசரியாக யோசிப்பதை விட சற்று வேறு கோணத்தில் இருந்து யோசித்து அதற்கான பதிலை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி உங்கள் சிந்தனை திறனை சோதிக்க ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம். 

ஒரு கடைக்காரர் ஐந்து காலி பாட்டில்களுக்குப் பதில் ஒரு முழு நிரப்பப்பட்ட பாட்டில் குளிர்பானத்தைக் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு நபரிடம் 77 காலி பாட்டில்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எத்தனை நிரப்பப்பட்ட முழு குளிர்பான பாட்டில்களைப் பெறலாம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

இதுவரை வெறும் எண்களை வைத்து புதிர்களை போட்டுவந்தோம். அனால் இன்றைய புதிர் நேரடி எண்ணாக கொடுக்காமல் வார்த்தைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இதுபோன்ற வார்த்தை புதிர்களை பள்ளி படிக்கும் காலத்தில் தீர்த்த நினைவுகள் சிலருக்கு வரலாம். வார்த்தைகளில் உள்ளதை எண் உருவத்திற்கு மாற்றி கணக்கை போட்டு பாருங்கள்.

நிகழ்கால சூழலை வைத்து தான் இந்த புதிரை எழுப்பி இருக்கிறோம். அது இந்த கணக்கை தீர்க்க நீங்கள் இந்த கணக்கு சூழலை உங்களை வைத்தே கற்பனை செய்து பார்க்க உதவும். உங்கள் கையில் காலி பாட்டில்கள் இருந்தால் எப்படி கணக்கு போடுவீர்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் கணக்கு எளிதாக தீர்ந்துவிடும்.

உங்கள் குழந்தைகளுக்கும் செலவு மற்றும் சேமிப்பு போன்ற விஷயங்களோடு கணக்கை கற்றுக்கொடுக்க இந்த மாதிரியான புதிர்கள் பேருதவியாக இருக்கும். நீங்களும் முயற்சி செய்து விடையை கண்டுபிடிங்க. என்ன விடை கிடைத்துவிட்டதா? இல்லை என்றால் இன்னும் கொஞ்சநேரம் சிந்தியுங்கள். விடை கிடைத்துவிடும்.

மூளையை எல்லாம் கசக்கி எத்தனை குளிர்பானங்களை வாங்கலாம் என்று கணக்கு போட்டு கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரி விடைக்கு போகலாமா ? உங்கள் விடையும் இதுவும் சரியாக பொருந்துகிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களிடம் இப்போது 77 காலி பாட்டில்கள் உள்ளது. 5 காலி பாட்டில்களுக்கு 1 நிரப்பப்பட்ட பாட்டில் என்று கடைக்காரர் கொடுப்பார். எனவே 77 காலி பாட்டில்களில் 5 இந்த பெருக்கல் வகையில் வரும் 75 பாட்டில்களை முதலில் எடுத்துக்கொள்வோம். 

முதல் சுற்றில், 75 பாட்டில்களை கொடுத்தால் அதற்கு பதிலாக அவர் 75/5 =15 நிரப்பப்பட்ட பாட்டில்களை தருவார். இது வரை உங்களுக்கு சரிதானே!

இப்போது நம் கையில் 15 நிரப்பப்பட்ட பாட்டில்களும் 2 காலி பாட்டில்களும் இருக்கும். 15 குளிர்பானங்களையும் குடித்துவிட்டு அதை கடைக்காரரிடம் கொடுப்போம்.

இரண்டாம் சுற்றில், 15 காலி பாட்டில்களை கொடுத்தால்,அதற்கு பதிலாக  15/5 = 3 முழு நிரப்பப்பட்ட பாட்டில்களை கடைக்காரர் தருவார். இதுவும் சரிதானே?

இப்போது நம் கையில் 3 நிரப்பப்பட்ட பாட்டில்களும் 2 காலி பாட்டில்களும் இருக்கும். 3 குளிர்பானங்களையும் குடித்துவிட்டு இப்போது பார்க்கத்தால் கையில் 5 காலி பாட்டில்கள் இருக்கும். மூன்றாம் சுற்றில், இதை  கடைக்காரரிடம் கொடுத்தால் 1 முழு நிரப்பப்பட்ட குளிர்பானம் கிடைக்கும்.

இதையும்  முயற்சி செய்து பாருங்க: இந்த புதிரை யாருடைய உதவியும் இல்லாமல் உங்களால் தீர்க்க முடியுமா?

கணக்கு பாதி முடித்து. இப்போது காலி பாட்டில்களை வைத்து வாங்கிய குளிர்பானங்களை மட்டும் கணக்கிடுவோம்.

முதல் சுற்று              = 15

இரண்டாம் சுற்று  =  3

மூன்றாம் சுற்று     =  1

மொத்தம்                   =19

ஆக, 77 காலி பாட்டில்களை வைத்து கடைக்காரரிடமிருந்து 19 நிரப்பப்பட்ட பாட்டில்களைப் பெறலாம்.

top videos

    எனவே, சரியான பதில் 19. உங்களுக்கும் அதே விடை தான் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். கணக்கு லாஜிக் எல்லாம் நிறைய சிந்திக்க, போட்டு பார்க்க வந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. நாளை மற்றொரு கணக்கோடு சந்திப்போம் மக்களே.

    First published:

    Tags: Trending