முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உங்களால் முடியுமா? இதோ புதிர்.. இந்த கணக்குக்கு விடை சொல்லுங்க பார்ப்போம்!

உங்களால் முடியுமா? இதோ புதிர்.. இந்த கணக்குக்கு விடை சொல்லுங்க பார்ப்போம்!

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

புதிர்கள் லாஜிக் புரிந்து விட்டால் சட்டென்று முடிந்து விடும். கணக்கில் உள்ள லாஜிக்கை மட்டும் தேடுங்கள்.. கணக்கு தானாக தீரும்.

  • Last Updated :
  • Chennai |

வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்று செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ், என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.

கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டு வர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

கணக்கில் உள்ள கூட்டல் கணக்கு நேரடியான கூட்டல் கணக்கு அல்ல என்பதை பார்த்ததும் தெரிந்திருப்பீர்கள். ஆனால் அந்த இரண்டு எண்களை வைத்து தான் சமன்பாட்டில் உள்ள வலதுபுறம் உள்ள எண் வந்திருக்கும். அது எப்படி வந்தது என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும். கூட்டல் தாண்டி இந்த கணக்கில் என்ன நடந்துள்ளது என்பது தான் இந்த கணக்கின் லாஜிக். 

ஆனால் இங்கு தான் சிக்கலும் கூட.. சரி இதற்கு ஒரு ஹிண்ட் தருகிறோம். இந்த கணக்கில் உள்ள எல்லா கூட்டல் கணக்குகளையும் கூட்டி அதன் விடைகள் மற்றும் கொடுக்கப்பட்ட விடைகளை வைத்து ஒப்பிட்டு  பாருங்கள். கணக்கின் புதிரான லாஜிக் எளிதாக விளங்கலாம்.

இந்த கணக்கை போட அதிகபட்சம் 60 வினாடிகள் தான் ஆகும். அதற்கு முன்னதாகவே நீங்கள் முடித்து விட்டீர்கள் என்றால் அசத்தல் சம்பவம் செய்துவிட்டிர்கள் போங்க… அந்த நேரத்திற்குள் விடை கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம், ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல் பழக பழக வந்துவிடும். சரி இப்போது விடைக்கு வருவோம். முதலில், இந்த கணக்கின் லாஜிக்கை சொல்கிறோம். அதை வைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்க..

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக் என்னவென்றால் ஒவ்வொரு வரிசையிலும் எண்களை கூட்டல் செய்துவிட்டு அதில் இருந்து 12 என்ற மதிப்பை கழிக்க வேண்டும். கழித்து கிடைக்கும் விடை தான் வலதுபுறம் கொடுக்கப்பட்டுள்ளது.இப்போது, இந்த லாஜிக்கை வைத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்க. விடை கிடைத்துவிடும். கிடைக்கும் விடை எண்கள் விடையோடு பொருந்துகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த லாஜிக்கை கணக்கின் ஒவ்வொரு வரிடையிலும் உள்ளிட்டு பார்ப்போம்.

முதல் வரிசையில், 

7+7=14-12-2

விடை சரியாக வந்துவிட்டது. இதே முறையை எல்லா வரிசைக்கும் போட்டு பார்ப்போம் 

8+8=16-12=4

8+5=13-12-1

இதையும் முயற்சி செய்து பாருங்க : உங்கள் லாஜிக் சிந்தனைக்கு சவால் விடும் புதிர் இதோ… விடையை கண்டுபிடிங்க…

6+9=15-12-3

10+11-21-12=9

எல்லாம் சரியாக பொருந்துகிறது. இறுதியாக கணக்கின் கேள்விக்கு வருவோம். 

4+9=13-12-1

1 என்பது தான் சரியான விடை. உங்களுக்கும் அதே விடை தான் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். கணக்கு லாஜிக் எல்லாம் நிறைய சித்திக்க, போட்டு பார்க்க வந்துவிடும். நாளை மற்றொரு கணக்கோடு சந்திப்போம் மக்களே…

First published:

Tags: Trending