முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddle | கணக்கில் உள்ள லாஜிக்கை கண்டுபிடித்து விடையை சொல்லுங்க பார்ப்போம்

Math Riddle | கணக்கில் உள்ள லாஜிக்கை கண்டுபிடித்து விடையை சொல்லுங்க பார்ப்போம்

கணக்கு புதிர்

கணக்கு புதிர்

புதிர்களின் லாஜிக் புரிந்துவிட்டால் சட்டென்று முடிந்து விடும். கணக்கில் உள்ள லாஜிக்கை மட்டும் தேடுங்கள்.. கணக்கு தானாக தீரும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • chennai |

வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது ஒரு சிலர் படம், சீரிஸ் என்று பார்ப்பார்கள். சிலர் தூங்குவார்கள். ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள நினைப்பார்கள். சிலர் புதிர், விடுகதைகள், சுடோகு போன்றவற்றை போடுவார்கள். அப்படி புதிர்களை கட்டவிழ்ப்பவர்களுக்கும் அதை முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும் ஒரு கணக்கு புதிரை கொண்டு வந்திருக்கிறோம்.

கணக்கு புதிர்களில் பல வகைகள் உண்டு. சமன்பாடுகள் கொண்ட புதிர்கள், வெறும் எண்களை கொண்ட புதிர்கள், படப்புதிர்கள், லாஜிக் எண்கள் என்று பல வகைகள் உண்டு. அதில் லாஜிக் கணக்கு தான் உங்களுக்கு இப்போது கொடுக்கிறோம். என்ன லாஜிக் பயன்படுத்தினால் விடுபட்ட எண்ணை கொண்டுவர முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.

ஒவ்வொரு கணக்கு பிரிவிலும் மூன்று எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சிறு எண்களும், ஒரு பெரிய எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு சிறிய எண்களை வைத்து எப்படி பெரிய எண்ணை பெறுவது என்பது தான் கணக்கு. இந்த கணக்கின் ஹிண்ட்டும் அது தான். அதை வைத்து கொஞ்சம் உங்கள் மூளையையும் காகிதத்தையும் கசக்கி பாருங்கள்.

ஒவ்வொரு கணக்கிற்கும் அதன் லாஜிக் தான் மூல ஆதாரம். கணக்கில் லாஜிக்கை கண்டுபிடித்துவிட்டால் நொடிகளில் கணக்கு முடிந்துவிடும். இது புரியாமல் தான் கணக்கு கடினமான பாடம் என்று நாம் நினைத்து கொள்கிறோம். சரி கணக்கிற்கு வருவோம். கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை கவனித்து பாருங்கள்.அதில் கூட்டல் , கழித்தல் பெருக்கல் என்று ஒவ்வொன்றாக போட்டு பாருங்கள்.

சரி உங்களுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். விளக்கத்திற்கு வருவோம்.இந்த விளக்கத்தின் படி உங்கள் விடையும் ஒத்துப் போகிறதா என்பதை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். விடை கிடைக்காதவர்கள் இந்த லாஜிக்கை கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்துபாருங்கள்.

இந்த கணக்கின் அடிப்படை லாஜிக், இரண்டு சிறு எண்களையும் பெருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இரண்டு எண்களையும் கூட்ட வேண்டும். இரண்டிலும் கிடைக்கும் விடையை கூடினால் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மூன்றாவது எண் கிடைத்துவிடும்.

முதல் கணக்கை கவனிப்போம். முதல் இரண்டு எண்களை பெருக்கினால்,

6 x 4 = 24

முதல் இரண்டு எண்களை கூட்டினால்,

4 + 6 = 10

இரண்டு விடைகளையும் கூட்டினால்,

24 + 10 = 34

கணக்கில் உள்ள பெரிய எண் கிடைத்துவிட்டது. இதே போல அடுத்த பகுதிகளை கவனிப்போம். இரண்டாவது பகுதியில் உள்ள எண்களை பெருக்கியும் , கூட்டியும் வரும் எண்களை கவனிப்போம்.

8 x 5 = 40

8 + 5 = 13

விடைகளை கூட்டினால்,

40+13 = 53

மூன்றாம் பகுதிக்கு வருவோம்

11 x 3 = 33

11 + 3 = 14

33 + 14 = 47

இதையும் முயற்சி செய்து பாருங்க: முக்கோணத்தின் லாஜிக் புரிந்து விடுபட்ட எண்ணை கண்டுபிடிங்க மக்களே!

மூன்று பகுதிகளிலும் பயன்படுத்திய லாஜிக்கை இறுதியாக கேள்வியில் உள்ளிடுவோம்.

9 x 2 = 18

2 + 9 = 11

18 + 11 = 29

எனவே விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் 29. உங்களுக்கும் இதே எண் வந்திருந்தால் வாழ்த்துகள். இல்லை என்றாலும் பரவாயில்லை மீண்டும் முயற்சி செய்யுங்கள். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல் போட போட கணக்கும் வந்துவிடும். விடாமல் முயற்சி செய்யுங்கள்.

First published:

Tags: Trending