முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Math Riddle | எண்ணும் எழுத்தும் கலந்த இந்த புதிரின் விடையை கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான்

Math Riddle | எண்ணும் எழுத்தும் கலந்த இந்த புதிரின் விடையை கண்டுபிடித்தால் நீங்க கில்லாடி தான்

புதிர்

புதிர்

புதிர்கள் லாஜிக் புரிந்து விட்டால் சட்டென்று முடிந்து விடும். கணக்கில் உள்ள லாஜிக்கை மட்டும் தேடுங்கள்.. கணக்கு தானாக தீரும்...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பொழுதுபோக்கு என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஒருவர் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தூங்குவார். ஒருவர் நேரம் கிடைக்கும் போது படிப்பார். சிலர் படங்கள், சீரிஸ் என்று பார்த்து தள்ளுவார்கள். சிலர் தங்களது விட்டு போன பழக்கங்களை எல்லாம் மீட்டெடுக்க இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்வார்கள்.

சிலர் காலை எழுந்தவுடன் செய்தித்தாளை விரித்து முந்தைய தினத்தின் செய்திகளை எல்லாம் கரைத்து குடித்துவிட்டு கடைசியாக அதில் இருக்கும் எண் மற்றும் வார்த்தை புதிர்களை தீர்க்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்து , ரயில் அல்லது மெட்ரோவில் போகும் போது கூட அதை போட்டுக் கொண்டே போவதை நம்மால் பார்க்க முடியும். அது போல நம்மால் புதிர்களை அவிழ்க்க முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

எளிதான லாஜிக் புதிர் ஒன்றை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறோம். இந்த கட்டத்திற்குள் இருக்கும் ஆங்கில எழுத்து மற்றும் எண்களின் இடையே உள்ள லாஜிக்கை கண்டுபிடித்து விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான் புதிரே. எளிமையாக தானே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் இது பள்ளி மாணவர்கள் கூட எளிதாக கண்டுபிடிக்கும் புதிர் தான்.

கொஞ்சம் பொறுமையாக யோசித்து பாருங்கள். எண்களையும் கொடுத்து எழுத்துக்களையும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இடையே ஏதோ ஒரு இணைப்பு இருக்கிறதல்லவா? அந்த இணைப்பு என்னவாக இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் தனி தனி எண்கள் வேறு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை வைத்து என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்.

இந்நேரம் புதிரின் லாஜிக்கையும் விடையையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை மீண்டும் முயற்சி செய்து பாருங்க. ஒரு ஹிண்ட் கூட தருகிறோம் ஆங்கில எழுத்துகளை அதன் வரிசையை வைத்து எழுத்துக்களுக்கு ஈடான எண்களை போட முடியும் தானே. அதை வைத்து ஏதாவது விடை கிடைக்கிறதா என்று பாருங்கள். இந்த முறை நிச்சயம் விடை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சரி விடைக்கு வருவோம். முதல் சதுரத்தில் உள்ள எண்களை கூட்டுங்கள்.

6 + 4 + 4 = 14

ஆங்கில எழுத்துக்களுக்கு A க்கு 1, B க்கு 2 என்று வரிசையாக எண் இட்டால், 14 ஆவது எழுத்து என்ன வருகிறதென்று பாருங்கள். N என்ற எழுத்து வருகிறதா? முதல் கட்டத்தில் உள்ள ஆங்கில எழுத்து N என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது தான் இந்த புதிரின் லாஜிக்.

அடுத்த கட்டத்தை பாருங்கள்.

4 + 1 + 7 = 12

ஆங்கில எழுத்துக்களில் 12 ஆவது எழுத்து L . சரியாக வருகிறதா?

மூன்றாவது கட்டத்திற்கு வருவோம்,

இதில் உள்ள எண்களை கூட்டினால்,

5 + 6 + 10 = 21

ஆங்கில எழுத்துக்களில் 21 ஆவது எழுத்து U . இதுவும் சரியாக வந்துவிட்டது.

இதையும் முயற்சி செய்து பாருங்கள் ;எண்களின் இடையே உள்ள லாஜிக்கை கண்டுபிடித்து விடை சொல்லுங்க மக்களே..!

இறுதியாக கணக்கிற்கு வருவோம்.இறுதி கட்டத்தில் உள்ள எண்களை கூட்டினால்,

1 + 14 + 2 = 17

ஆங்கில எழுத்து வரிசையில் 17 ஆவது எழுத்து எது என்று பாருங்கள். Q என்பது தான் இந்த புதிரின் சரியான விடை. இதே பதில் தானே உங்களுக்கும் வந்திருக்கிறது. சரி மக்களே! மற்றொரு நல்ல புதிரோடு நாளை சந்திப்போம். அது வரை கொடுக்கப்பட்ட புதிர்களை பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.

First published:

Tags: Trending