முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வாழைப்பழம்.. மாணவர் செய்த பகீர் சம்பவம்... நடந்தது என்ன..?

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வாழைப்பழம்.. மாணவர் செய்த பகீர் சம்பவம்... நடந்தது என்ன..?

வைரலாகும் வீடியோ..!

வைரலாகும் வீடியோ..!

வாழைப்பழம் கொண்டு செய்யப்பட்ட விலைமதிப்பில்லாத கலைப் பொருள் ஒன்று சுவரில் மாட்ட பட்டு இருந்தது அதன் மதிப்பு $120,000. இந்திய மதிப்பு படி இது தோராயமாக ஒரு கோடி ரூபாய்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக நாம் கடும் பசியில் இருக்கும் பொழுது, ஏதாவது சாப்பிடுவதற்கு இருந்தால் போதும் என்று எண்ணி கண்ணில் கிடைக்கும் ஏதாவது ஒரு உணவை சாப்பிட்டு விடுவோம். உயிர் வாழ்வதன் பொருட்டு பலர் இறைச்சிகளை பச்சையாகவே உண்டுள்ளார்கள் என்பது குறித்தும் நாம் கேள்வி பட்டுள்ளோம். நீண்ட காலமாக உணவு கிடைக்காத காரணத்தால் அவர்களுக்கு கிடைத்த உணவு எதுவாக இருந்தாலும் அதை சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இந்த சியோல் மாணவர் தனக்கு அவசர கால சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்த போதிலும், தனக்கு ஏற்பட்ட பசியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழைப்பழம் கொண்டு செய்யப்பட்ட  விலைமதிப்பில்லாத கலைப் பொருள் ஒன்று சுவரில் மாட்டப் பட்டு இருந்தது அதன் மதிப்பு $120,000. இந்திய மதிப்பு படி இது தோராயமாக ஒரு கோடி ரூபாய். இது சியோலின் லீயும் மியூசியம் ஆஃப் ஆர்ட் என்ற இடத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட வந்த ஒரு மாணவர் பசியின் காரணமாக அதை எடுத்து சாப்பிட்டுள்ளார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற கேள்விக்கு, தனக்கு கடுமையான பசி ஏற்பட்டதாகவும் அதற்காக தான் அதனை உண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூயார்க் போஸ்ட் மூலம் கிடைத்த தகவலின்படி, இந்த பிரபலமான கலைப்பொருள் இத்தாலிய ஓவியர் மௌரிசௌ கேட்டிலென் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதற்கு “Comedian” பெயர் சூட்டப்பட்டு, மக்களின் பார்வைக்காக மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நோ ஹியூன்-சூ என்ற மாணவர் இதனை காண வந்த போது, தனக்கு பசி ஏற்பட்டுள்ளதால் அதனை ஒரே நிமிடத்தில் எடுத்து சாப்பிட்டுள்ளார்.

Read More : மாமனாரை திருமணம் செய்தாரா மருமகள்..? தீயாய் பரவிய வீடியோவின் உண்மை இதுதான்!

வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்னர், அதன் தோலை மீண்டும் சுவரில் ஒட்டி வைத்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் அவரது நண்பர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து மியூசியத்தின் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது, தனது காலை உணவை சாப்பிடாத காரணத்தால் தனக்கு மிகவும் பசித்ததாகவும், அதன் காரணமாகவே வாழைப்பழத்தை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு கலைப்பொருளை சேதப்படுத்தி அதனை மாற்றி அமைப்பதும் ஒரு கலை தான் என்று மற்றொரு காணொலியில் அந்த மாணவர் கூறி இருக்கிறார்.

top videos

    பார்வையாளர் தனது கலைப்பொருளை சாப்பிட்டது குறித்து ஓவியர் எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மியூசியத்தில் வாழைப்பழம் மாற்றப்படும் என்பதால் இது குறித்து கவலைப்பட ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.

    First published:

    Tags: Trending, Viral