முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வீடியோ லைக் செய்தால் பணம் தருவதாக கூறி வாட்சப் மெசேஜ் வருகிறதா..? உஷார்..!

வீடியோ லைக் செய்தால் பணம் தருவதாக கூறி வாட்சப் மெசேஜ் வருகிறதா..? உஷார்..!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

குறிப்பாக சர்வதேச எண்களிலிருந்து பல்வேறு வாட்ஸ்அப் யூசர்களுக்கும் அழைப்புகள் சென்றுள்ளது. சிலருக்கு கால் மற்றும் சிலருக்கு மெசேஜ் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் மோசடிக்காரர்கள் தொடர்பு கொண்டு உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக வாட்ஸ் அப்பில் நூதன முறையில் பணம் மோசடி செய்யும் மோசடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக வேலை தருவதாக கூறி பலருக்கும் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருவதாகவும் பலர் புகார் அளித்துள்ளனர். வீட்டிலிருந்தே வேலை பார்க்க வாய்ப்பு தருவதாகவும் இந்த வேலையை நீங்கள் செய்ய ஒத்துக் கொண்டால் அதிக அளவு பணம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

இதைப் பற்றி பேசிய ட்விட்டர் யூசர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது ஜார்ஜினா என்று பெயர் கொண்ட பெண் ஒருவர் இவருக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, மூன்று வீடியோக்களை லைக் செய்யும் பட்சத்தில் 150 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என கூறியுள்ளார். அவரும் அதன்படியே மூன்று வீடியோக்களை லைக் செய்ததும் இவருக்கு பணமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு பல்வேறு நபர்கள் இருக்கும் ஒரு டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர். அதில் 20 விதமான வேளைகளைக் கொடுத்து ஒவ்வொரு வேலைக்கும் 50 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு வேலையை முடிப்பதற்கு நாம் நம்முடைய பணத்தை முதலீடாக செலுத்த வேண்டும் எனவும், அதை வட்டியுடன் சேர்ந்து மீண்டும் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Read More : உங்க ஃபோன் Slow-வா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க போதும்..

அவரவர்கள் பணத்தை கொடுத்ததுமே உடனடியாக அந்த குழுவில் இருந்து அவர்களை நீக்கி உள்ளனர் இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர். மேலும் அந்த குழுவில் இருந்த இந்த ட்விட்டர் வாசி, குழுவின் அட்மின் மற்றவர்களை அவ்வபோது வெளியேற்றுவதை கவனித்துள்ளார். அந்த டெலிகிராம் குழு மற்றும் வாட்ஸ் அப் குழு இரண்டுமே இவர் ஆஃப்லைன் சென்ற சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த மோசடியின் முதல் கட்டத்தில் உங்களுக்கு வேலை செய்தால் பணம் கிடைக்கும் என்று நம்ப வைப்பதற்காக உங்களிடம் அவர்கள் ஒரு சிறிய தொகையை சம்பளமாக கொடுப்பார்கள். வெறும் யுடியூப் வீடியோவை லைக் செய்வதால் பணம் கிடைக்கிறது என்று பலரும் இந்த வலையில் மயங்கி விழுந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு ஏதேனும் வந்தால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக சர்வதேச எண்ணில் இருந்து அழைப்புகளும் செய்திகளும் வரும் பட்சத்தில் அவற்றை புகார் அளித்து பிளாக் செய்து விடுவது சாலச் சிறந்தது. மேலும் வாட்ஸ் அப்பின் குறைதீர்க்கும் வசதியையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

First published:

Tags: Trending, Viral