நேஷனல் க்ரஷ் என்று பரவலாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, சில நாட்களுக்கு முன்பு நெட்டிசன்களால் பயங்கரமாக கிண்டல் செய்யப்பட்டார். ரஷ்மிகா ஒரு வீகன் என்றும், அசைவம் மட்டுமல்லாமல் பால் பொருட்களைக் கூட தவிர்க்கிறார் என்று பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஆனால், சிக்கன் பர்கரை வைத்து சமீபத்திய விளம்பரம் ஒன்றில் தோன்றியது சிக்கலை கிளப்பியது. அழகாக மட்டுமில்லாமல், உடலை ஃபிட்டாகவும் வைத்திருக்கும் ராஷ்மிகா, தன்னைச் சுற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
கடுமையாக உடற்பயிற்சி செய்வது என்பது பாடி பில்டிங் செய்பவர்களுக்கானது என்ற கண்ணோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் பல நடிகைகளும் பிரபலங்களும் அடங்குவார்கள். உடல் கட்டுகோப்பாக இருக்க டயட் மட்டுமின்றி எக்சர்சைஸ் மிகவும் அவசியம் என்பதை பல பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் சமீபத்திய சென்சேஷன் ராஷ்மிகா!
Read More : யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் - வாழ்த்தும் பிரபலங்கள்
இரண்டு மெடிகல் பால்ஸ்-ஐ பேலன்ஸ் செய்யும் காட்சிகள் மற்றும் மைல்டான புஷ்-அப்ஸ்களை எடுக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளுக்கும், தீவிரமான கோர் ஸ்ட்ரெங்த் இருந்தால் மட்டுமே செய்ய முடியும், ராஷ்மிகா அதனை செய்து அசத்தி இருக்கிறார். ‘நீங்கள் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, அதில் கவனம் செலுத்தி அதற்கான வேலைகளை செய்தால் எதை வேண்டுமானாலும் அடைய முடியும் என்பது எவ்வளவு கிரேசியான விஷயம்’ என்று வீடியோவின் கேப்ஷனாகப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மேலே பகிரப்பட்ட ஒரு வீடியோ மட்டுமல்லாமல், மேலும் ஒரு ரீலை உருவாக்கி, ஜிம்மில் உடற்பயற்சி செய்யும் செஷன்களை சேர்த்துள்ளார். அதில், சில ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள், வார்ம் அப்ஸ், கிக்ஸ், என்று பல விதமான பயிற்சிகளை செய்கிறார். இந்தப் பயிற்சிகளை ராஷ்மிகா என்ஜாய் செய்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் என்றால், கமென்ட்டில் தெரிவிக்கவும் என்று ஒரு எமோடிகானை பகிர்ந்துள்ளார்.
ஜிம்மிற்கு சென்றாலே அழ வேண்டுமா என்ன? உடற்பயிற்சி செய்வதை ஜாலியாக எடுத்துக்கொள்ளலாம் என்பதை ராஷ்மிகா நிரூபித்துள்ளார். சிலர் கோவத்தை அல்லது எரிச்சலைக் குறைக்கவும் ஜிம்மிற்கு சென்று கடுமையாக பயிற்சி செய்வார்கள். அதே போலத் தான் ராஷ்மிகாவும்! மொத்த டென்ஷனையும் குறைக்க, இதைத் தான் செய்வேன் என்று ராஷ்மிகா மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ளார்..
View this post on Instagram
தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த கேப்ஷன்ஸ் இருக்கலாம் என தோன்றுகிறது. கியூட்டான ராஷ்மிகாவுக்கு, மன உறுதி மட்டுமல்ல, உடல் உறுதியும் அதிகம் என்பதை இந்த வீடியோக்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Rashmika Mandanna, Entertainment, Trending, Viral