முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / அந்த மனசுதான் சார் கடவுள்..! வீடற்று சிறுவனுக்கு உதவி புரிந்த காவல் அதிகாரி - வைரலான வீடியோ

அந்த மனசுதான் சார் கடவுள்..! வீடற்று சிறுவனுக்கு உதவி புரிந்த காவல் அதிகாரி - வைரலான வீடியோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

சமுதாயத்தின் நலிந்த பிரிவினரிடம் மனிதநேயத்துடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பும் பொது மக்களிடையே இருக்கிறது

  • Last Updated :
  • Tamil Nadu |

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் இருக்கிறது. அதே சமயம், சாமானிய மனிதர், ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரிடம் மனிதநேயத்துடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பும் பொது மக்களிடையே இருக்கிறது.

அவ்வப்போது சமூக ஊடகங்களில், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் பொது மக்களால் கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக, ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி எஸ்.ஐ பரமசிவம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.  குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய இவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்

இந்நிலையில்,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Abhay Giri என்ற பயனர் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வீடற்று வறுமையின் கோரப் பிடியில் இருந்த சிறுவனுக்கு காவலர் ஒருவர்,  குடிதண்ணீர் பாட்டில்   வழங்குகிறார். இந்த எதிர்பாராத அன்பளிப்பில் இருந்து அந்த சிறுவன் மீளுவதற்குள் காலனி பரிசாக தருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Abhay Giri (@abhaygiri21)மேலும், அந்த காலனியை மாட்டிக் கொள்வதற்கும் உதவி புரிகிறார். பரிசுகள் வழங்கும் அந்த காவல்துறை அதிகாரிக்கு அச்சிறுவன் நன்றி தெரிவிக்கும் வகையில் பாதம் தொட முயற்சிக்கும் போது, அந்த அதிகாரி மூன்றாவது அன்பளிப்பாக சட்டை, பேன்ட்-ஐயும் பரிசாக அளிக்கிறார்.

இதையும் வாசிக்க: Watch | மைசூரில் 'தோசை சுட்டு ' மகிழ்ந்த பிரியங்கா காந்தி.. வைரலான வீடியோ

top videos

    இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீட்டற்று, தனித்துவிடப்பட்ட சிறுவனை  இருகரம் நீட்டி அரவணைத்து, அவனுக்கு தேவையான பல வசதிகளையும் செய்து கொடுத்த நெட்டிசன்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

    First published:

    Tags: Viral News, Viral Videos