முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ப்ளீஸ் மோடி ஜி..! வைரலாகும் பள்ளி சிறுமியின் கோரிக்கை..!

ப்ளீஸ் மோடி ஜி..! வைரலாகும் பள்ளி சிறுமியின் கோரிக்கை..!

வைரலாகும் வீடியோ..!

வைரலாகும் வீடியோ..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Jammu, India

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்முவில் அமைந்துளால் கதுவா மாவட்டத்தில் உள்ள லோஹாய்-மல்ஹர் கிராமத்தைச் சேர்ந்த சீரத் நாஸ், தனது அரசுப் பள்ளியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அதன் உள்கட்டமைப்பு சரியில்லாமல் இருப்பதையும், அதனால் குழந்தைகள் விரிசல் விழுந்த தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதையும் உணர்ந்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் 'மார்மிக் நியூஸ்' என்ற பேஸ்புக் பக்கத்தில், ஐந்து நிமிட வைரல் வீடியோ பிரிவின் கீழ், நாஸ், தான் உள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது பள்ளி வளாகத்தில் நடந்து சென்று, பிரதமரிடம் அதன் நிலை குறித்து விளக்கி அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

“மோடி ஜி, தயவுசெய்து, எங்களுக்கு ஒரு நல்ல பள்ளியை உருவாக்கித் தாருங்கள். எங்கள் பள்ளியில் தரை எவ்வளவு மோசமாக உள்ளது என்று பாருங்கள். பள்ளியில் நாங்கள் அமர்வதற்கு இருக்கைகள் எதுவும் இல்லாததால் நாங்கள் தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கீழே அமர்வதால் எங்கள் சீருடைகள் மிகவும் அழுக்காகின்றன. இதனால் வீட்டில் எங்கள் அம்மாக்களிடம் திட்டு வாங்க வேண்டியுள்ளது.”, என்று பள்ளியின் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டி பிரதமரிடம் அந்த சிறுமி முறையிட்டார்.

Read More : நேருக்கு நேர் முறைத்து பார்த்த சிங்கம்... அதிர்ச்சியில் உறைந்த வேட்டைக்காரர்... அடுத்து நடந்த அதிசயம்..!

அடுத்து பள்ளியின் கழிவறைக்கு சென்று, அது எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்றும் டாய்லட் இருக்கைகள் உடைந்துவிட்டது என்பதையும் சுட்டிக் காட்டினார். மாணவர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டி இருந்த கொடுமையான சூழலையும், இவ்வாறு பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததையும் நாஸ் அழகாக விளக்கியுள்ளார்.

"மோடி ஜி நீங்கள் தான் நம் நாட்டின் தலைவர். நீங்களும் இந்த ஏழை நாட்டின் மகன். அதனால், எங்கள் பள்ளியின் நிலை உணர்ந்து தயவுசெய்து நல்ல வசதிகள் உடைய ஒரு சிறந்த பள்ளியாக மாற்ற வழி செய்து தாருங்கள். இதனை என் கோரிக்கையாக ஏற்று தயவு கூர்ந்து எங்களுக்கு ஒரு சிறந்த பள்ளியைத் தாருங்கள்." என்று உருக்கமாக அவர் தன் உரையை முடித்துக் கொண்டார்.

top videos

    பேஸ்புக்கில் பலரும் இந்த சிறுமியின் அசத்தலான துணிச்சல் மற்றும் மன தைரியம் குறித்து பாராட்டி வருகின்றனர். பாராட்டுக்களுடன், கண்டிப்பாக மோடி  உன் பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றுவார் என்று சிறுமிக்கு ஆதரவாக கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    First published:

    Tags: Jammu, Trending, Viral Video