ஒரு புதிர் அல்லது பிரெயின் டீஸர் அல்லது நியூமரிக் உள்ளிட்ட பல வடிவில் நம் புத்தி கூர்மை மற்றும் கவனிக்கும் திறனை சோதிக்கிறது. எனவே நம்முடைய மூளை மற்றும் கண்களுக்கும் தீவிர வேலை கொடுக்க கூடிய ஆப்டிகல் இல்யூஷன்கள் சோஷியல் மீடியாவில்அதிகம் ஷேர் செய்யப்பட்டு நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகின்றன.
தவிர ஒரு பொருள் அல்லது விஷயத்தை நமது மூளை எவ்வாறு உணருகிறது என்பதை அறிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உதவுகின்றன. எனவே நிறைய நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் புத்திஜிர்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்லைனில் புத்திசாலித்தனமாக நேரம் செலவிட நினைப்பவர்களின் பெஸ்ட் சாய்ஸாக இருக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள்.
கண்களை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் கூட சோஷியல் மீடியாக்களில் வரவேற்பை பெற காரணம் அவற்றுள் மறைந்திருக்கும் புதிரை கண்டுபிடிப்பதில் ஏற்படும் சுவாரசியம். எனவே தான் பல ஆப்டிகல் இல்யூஷன்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ஹங்கேரிய கிராஃபிக் கலைஞரான Gergely Dudas-ன் இல்யூஷன் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More : Logical reasoning | இந்த திசை கேள்விக்கான பதிலை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்க!
இந்த இல்யூஷன் இமேஜில் பல பன்றி உருவங்கள் அடங்கி உள்ளன. இதிலிருக்கும் பன்றிகளின் தலையில் தொப்பி இருக்கிறது, ஆனால் அதே சமயம் தொப்பிகள் இல்லாத மூன்று பன்றிகளும் இதில் உள்ளன. அவற்றை சரியாக அதே நேரம் குறைந்த வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க சவால் விடுகிறது இந்த இல்யூஷன் இமேஜ். அந்த வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் இருக்க கூடிய தொப்பி அணியாத மூன்று பன்றிகளை நீங்கள் வெறும் 9 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களது கண்பார்வை கூர்மையை பரிசோதிக்கும் வகையிலான சவால் அடங்கிய ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பாருங்கள்.
உங்களால் மேலே உள்ள இமேஜில் தொப்பி அணியாமல் இருக்கும் 3 பன்றிகளை ஒன்பதே வினாடிகளில்
கண்டுபிடிக்க முடியுமா.! இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கான விடையை தீர்ப்பதற்கான ட்ரிக்ஸ் இமேஜை உன்னிப்பாக கவனிப்பதாகும். குறைந்த நேரமே இருந்தாலும் இமேஜில் அதிதீவிர பார்வை திறனை செலுத்துவதன் மூலம் விடையை கண்டறியலாம். உங்களால் பல முறை முயன்றும் தொப்பி அணியாத 3 பன்றிகளையும் கண்டறிய முடியவில்லையா.! சரியான பதிலை பார்க்கே கீழே விடை வட்டமிடப்பட்டுள்ள இமேஜை பாருங்கள்.
ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது அலல்து விடுக்கப்பட்டிருக்கும் சவாலுக்கான விடையை கண்டறிவது என்பது, நீங்கள் அந்த இல்யூஷன் இமேஜை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள் எவ்வாறு கணிக்கிறீர்கள் என்பது போன்ற பல விஷயங்களை அடிப்படையாக கொண்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral