நம் மூளை மற்றும் கண்களுக்கு வேலை கொடுக்க கூடிய பல விஷயங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. இவற்றில் முக்கியமானவை ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள். சில ஆப்டிகல் இல்யூஷன்கள் எப்போதும் தோன்றுவதை அப்படியே காட்டாது.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பது சாதனை உணர்வை வழங்குவதால் நெட்டிசன்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஏனென்றால் இதில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டறிய கண்களையும், மூளையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மற்றும் புத்திசாலித்தனமாக கழிக்க விரும்பினால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன்களில் நேரம் செலவழிக்கலாம்.
இப்போது நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் பெரிய பாத்ரூம் இருக்கிறது. இந்த பாத்ரூம் அழகான செடிகள் மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பல அலங்கார பொருட்களால் நிரம்பி இருக்கிறது. நிறைய தாவரங்கள் சூழ்ந்த பாத்டப்-ஐ நம்மால் பார்க்க முடியும். இந்த பாத்ரூமில் முக்கிய பொருட்களை வைக்க ஏதுவாக அலமாரிகளும் உள்ளன. அலமாரியில், டூத் பிரஷ், ஹோல்டர்ஸ், பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடிக்கு அருகில் உள்ள ஹோல்டரில் ஒரு துண்டு தொங்குகிறது.
Read More : முக்கோணத்தின் லாஜிக் புரிந்து விடுபட்ட எண்ணை கண்டுபிடிங்க மக்களே!
இப்படிப்பட்ட அழகான இந்த பாத்ரூமில் தவளை ஒன்றும் இருக்கிறது. இந்த தவளை எங்கே இருக்கிறது என்பதை வெறும் 21 வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் மூலம் உங்களுக்கு விடுக்கப்படும் சவால் ஆகும். இந்த இமேஜில் மறைந்திருக்கும் தவளையை இதுவரை 21 வினாடிகளுக்குள் சுமார் 5% பேர் மட்டுமே கண்டுபிடித்திருப்பதாக தெரிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் உங்கள் IQ லெவலை டெஸ்ட் செய்து கொள்ள வேடிக்கையான வழியாகும். சரி கீழே நீங்கள் விடை கண்டறிய வேண்டிய ஆப்டிகல் இல்யூஷனை பாருங்கள்.
மேலே உள்ளே இமேஜை உற்று பார்த்தும் உங்களால் மறைந்திருக்கும் தவளையை 21 வினாடிகளில் கண்டறிய முடியவில்லையா.! இப்போது உங்களுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறோம். நீங்கள் இந்த இமேஜில் பல்புக்கு அருகில் கவனத்தை செலுத்தவும். இப்போதும் உங்களால் தவளையை கண்டுபிடிக்க முடியவில்லையா.? இப்போது பல்புக்கு அருகில் உள்ள அலமாரியை பார்க்கவும். அங்கிருக்கும் செடியில் ஒரு தவளை அமர்ந்திருப்பதை காணலாம். மிகவும் சிறிய தவளை என்பதால் பலரும் தவளையை கண்டறிய திணறுவார்கள். நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால் கீழே விடை வட்டமிடப்பட்டிருக்கும் இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending, Viral